பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அறிக்கையில்,
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்படுகிறார். ஆறு மாத காலத்திற்கு ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது. எனக் கூறப்பட்டுள்ளது.



மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணி மாநிலப் பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிலையில் "நான் கட்சியைக் கலங்கப்படுத்த. வில்லை. என்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை விடமாட்டேன். தொடர்ந்து கட்சிப் பணி செய்வேன்" என பாஜகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். காயத்ரி ரகுராம். நடிகை, நடன இயக்குனராக இருந்தவர் பாஜகவில் இணைந்து செயல்படுகிறார்.காயத்ரி ரகுராமுக்கும், பாஜகவை சேர்ந்த சிலருக்கும் மோதல் போக்குகள் இருந்து வந்தது. இவர்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எனவும் கூறப்படுகிறது.




இந்நிலையில் தான் தன்னை விமர்சனம் செய்யும் நபர்களை காயத்ரி ரகுராமும் தாக்கி ட்விட்டரில் பதிவிட்டார். இது விவாதத்துக்கு உள்ளான நிலையில் தான் இன்று பாஜக மாநில தலைவர் காயத்ரி ரகுராமை ஆறுமாத காலம் வரை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளார் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் , ‛‛நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதனை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் தேசத்துக்காக உழைப்பேன்'' என தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து காயத்ரி ரகுராம் குறித்த விவாதம் அக்கட்சியினர் மத்தியில் காயத்ரியை காசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லவில்லை. இதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற கோபத்தில் காயத்ரி இப்படி போஸ்ட் செய்ததாக பேசப்படுகிறது.பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி நலப்பிரிவு மாநிலத் தலைவர் திருச்சிராப்பள்ளி சூர்யா பேசியதாக ஒலிப்பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகியது.
இந்த ஒலிப்பதிவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் வேறு விதமான கேள்விகளையும் எழுப்பியது.
பாஜகவில் புதிதாக இணைந்த திருச்சி சூர்யா, பஜகவின் ஓபிசி நலப்பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக உள்ள இவருக்கும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் டெய்சி சரணுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகக் கூறி அதில் கருத்து வெளியானது.
இருவரும் பேசியதாக கூறப்படும், அதிகாரபூர்வமற்ற ஒலிப்பதிவுக் கருத்து இணையத்தில் உலவுகிறது. இதில் பேசுவது இருவரும் தானா என்று உறுதி செய்யப்படவில்லை. இருவரும் அதை மறுக்கவில்லை.
இந்த ஒலிப்பதிவில் கேட்கும் பெண் குரல் டெய்சியின் குரலென்று கூறப்படுகிறது. எதிரில் கேட்கும் குரல் கொண்ட நபரை டெய்சி சூர்யா என்று அழைத்துச் சண்டை போட்டுள்ளார்.
பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் தனது துறைக்குகஹ கீழ் கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாகப் பேசியதாகவும் . இதில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படக் கூடாது. அதில் நியமிக்கப்படும் நிர்வாகிகள் என்னுடைய ஆட்களாக இருக்க வேண்டுமென்று சூர்யா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதான் இருவருக்குமிடையில் ஏற்பட்ட மோதலுக்காண காரணமாம்.
இந்த நிலையில் டெய்சிக்கு அதிகாலை 6. 20 மணிக்கு தொலைபேசியில் மூலம் சூர்யா பேசியதாக ஒலிவடிவம் வெளியாகியது. அதில் மிக மோசமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். முழுக்க முழுக்க தரமற்ற வார்த்தைகள். அதோடு.. உன்னைத் தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாகக் கூறப்படுகிறது. உன்னுடைய உடல் மெரினாவில் கிடக்குமென்றும் அந்த ஒலிப்பதிவு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக பார்க்கும் நிலை. எதிரில் அந்தப் பெண் அமைதியாக விளக்கம் கொடுக்க முயன்றும், ஆண் குரல் தொடர்ந்து கடுமையாக பேசுகிறது.
அதில் உள்ளபடி
"நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது, என்று கூறி உள்ளார். இந்த ஆடியோவில் இருப்பது சூர்யா என்று உறுதியாகவில்லை. ஆனாலும் : பாஜக நிகழ்ச்சிகளில் சூர்யா சிவா பங்கேற்க வேண்டாம் என தமிழ்நாடுபாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். சூர்யாவின் ஆடியோ என்று சொல்லப்படும் ஆடியோ வைரலான காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இன்னொரு சர்ச்சையில் எழுந்துள்ளது. டெய்சி பதவி எப்படி பெற்றார் என்று இதில் சூர்யா சில விஷயங்களை குறிப்பிட்டு உள்ளார்.
அதில் பாஜக நிர்வாகி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு உள்ளார். அந்த நபர் குறித்தும் இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே பாஜகவில் பதவி பெறுவது தொடர்பாக அந்த நபர் மீது சில பெண்கள் ரீதியான புகார்கள் வைக்கப்பட்டன. அதே நபரின் பெயரின் மீண்டும் திருச்சி சூர்யா பயன்படுத்தி உள்ளார். இது போக தற்போது பாஜகவில் திருச்சி சூர்யா ஆடியோவை லீக் செய்தது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இது தற்போது பாஜக வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆடியோவை மீடியாவுக்கு கொடுத்தது யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.
பாஜகவை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகி ஒருவர் இந்த ஆடியோவை மீடியாக்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கட்சியில் நடக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த ஆடியோ விவகாரமும், காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரமும் டெல்லி வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி ரீதியாக விசாரணை நடத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விவரங்கள் காரணமாக ஒரே நாளில் அண்ணாமலைக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காயத்ரி ரகுராம் டிவிட்டரில் பதிலளித்துள்ளார். பாஜகவிலிருந்து
டெய்சி சரணிடம் அக்கட்சியின் ஓபிசி மாநில தலைவர் திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்த காயத்ரி ரகுராம், அவருக்கு பதவி வழங்கியது தவறி என்று கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபடுவதால் 6 மாத காலம் காயத்ரி ரகுராமன் இடைநீக்கம் செய்யப்படுவதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.இந்த அறிக்கையை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காயத்ரி, "நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. தேசத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்; சூர்யா சிவாவுக்கு தடை - சர்ச்சை ஆடியோ; அண்ணாமலை நடவடிக்கை - நடந்தது என்ன?
தி.மு.க.,வில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை' என தி.மு.க.,விலிருந்து வெளியேறி பா.ஜ.க.,வில் இணைந்தவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா.
தற்சமயம் தமிழக பா.ஜ.க.,வின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருக்கிறார். பா.ஜ.க.,வுக்கு சென்றபிறகு தி.மு.க., தலைமையையும், தி.மு.க.,வின் முக்கிய நபர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். இதற்கிடையே பேருந்து கடத்தல் வழக்கு, பள்ளி அபகரிப்பு வழக்கு என அவரைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், தமிழக பா.ஜ.க.,வின் சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு ஆபாசமாகப் பேசியும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா சிவா பேசியிருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டெய்சி சரண் வெளியாகியுள்ள அந்த செல்போன் உரையாடலில் பேசும் சூர்யா சிவா, ``மாவட்டப் பொறுப்புல மைனாரிட்டிய போட முடியாமயே இவ்ளோ தாண்டுறியே. 68 சதவிகித ஓபிசியை வச்சிக்கிட்டு நாளைக்கு நான் என் சாதிகாரனை ஏவி விடுறேன். நீ ஊர் தாண்ட முடியாது. உன் வீடு புகுந்து எல்லாத்தையும் வெட்டிப் புடுவேன்" என தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா, தொடர்ந்து பேசுகையில். ``நீ அண்ணாமலைகிட்ட போய்க்க. ஜெ.பி.நட்டா, அமித் ஷா, மோடின்னு யார்கிட்ட வேணும்னாலும் போய்க்கோ. ஆனானப்பட்ட தி.மு.க.,லயே ரெளடியிசம் பண்ணிட்டு வந்தவன் நான்' எனக் கடுமையாக பேசியுள்ளார்.
சூர்யா சிவா பா.ஜ.க.,வில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும், டெய்சி சரணுக்கும் இடையே நடந்து வந்த மோதல், இந்த ஆடியோ மூலமாக அம்பலமாகியுள்ளதாகக் கூறுகின்றனர். இந்த விவகாரத்தினை டெய்சி சரண் தரப்பு மாநில தலைமைக்கு கொண்டு சென்று, சூர்யா சிவாவை அழைத்து விசாரணை நடத்தக் கோரியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, 'சூர்யா சிவா பா.ஜ.க.,வில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில், யார் கொடுக்கும் தைரியத்தால் இப்படி தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கியும் அடாவடியாக நடந்துவருகிறாரோ!' என பா.ஜ.க.,வினரே கடும் அதிருப்தியில் இருக்கின்றனராம்.
இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், `` சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு.
திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு" என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ``காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்" என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்,
மேலும் அண்ணாமலை, ``தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும் ஓ.பி.சி அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்துக்கு வந்தது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாள்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில துணை தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என அறிவுறுத்துகிறோம்" என கூறியுள்ளார்.ஆமா நீங்கள் எப்போது பாஜகவின் தலைவரானீர்கள்? சொந்தக் காசில் சூனியம். என அண்ணாமலை ஆதரவாளர்கள் மீது காயத்ரி ரகுராம் தாக்கு
என்னை கட்சியிலிருந்து வெளியே போ என்று சொன்ன ட்வீட்டுக்கு லைக் கொடுத்த பாஜக நிர்வாகி எப்போது கட்சியின் தலைவரானார் எனத் தெரியவில்லை என்று பாஜக காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.
வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்தார். ஆனால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதனால் காயத்ரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருக்கும் காயத்ரியை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்ற கோபம் காயத்ரிக்கு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தனது பொறுப்புக்குரிய மரியாதையை அண்ணாமலை தரவில்லை என காயத்ரிரகுராம் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதையறிந்த அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அதாவது அண்ணாமலை புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்திருக்கும் சிலர் காயத்ரியின் பெயரைக் குறிப்பிடாமல் சிலர் பிரதமர் அளவில் எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டிருக்கு.
தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லனா மானாட மயிலாட போய் கொரியோகிராபர் வேலையைப் பாரு என காயத்ரியை மறைமுகமாக அண்ணாமலை ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளார்கள். இந்த ட்வீட்டிற்கு தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலவர் செல்வகுமார் விருப்பம் கொடுத்துள்ளார். இது காயத்ரிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியதால்.
அதற்கு காயத்ரி ரகுராம் தனது பதில் ட்வீட்டில் வார் ரூம் ஊழியர்களாக இருந்தாலும் சரி செல்வக்குமாரின் ஊழியர்களாக இருந்தாலும் சரி நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் போலி உலகமான இணையத்தில் யாரும் விழப்போவதில்லை. அது போல் அந்தப் போலி உலகில் தேர்தலும் நடக்கப் போவதில்லை. நீங்கள் எல்லாம் ஒரு நாள் சிக்குவீர்கள். மூத்த தலைவர்களை யார் இப்படி இழிவுப்படுத்தி வருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தைரியம் இருந்தால் என்னிடம் மோதிப் பாருங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நான் நிறைய முறை கிண்டல் செய்யப்பட்டேன், விமர்சிக்கப்பட்டேன். அது பல பல முறை திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினராலும் விமர்சிக்கப்பட்டேன். கடந்த மாதம் இல.கணேசன் ஐயாவை இந்த டீம்தான் (அண்ணாமலை ஆதரவாளர் அணியைச் சொல்கிறார்) விமர்சனம் செய்ததென்பது எங்களுக்குத் தெரியும். பாஜகவுக்கு இல. கணேசன் புற்றுநோய் உண்டாக்கும் கிருமி என குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் பார்த்தால் சொந்த கட்சியினரையே டிரோல் செய்யும் நீங்கள் தான் பாஜகவுக்கு புற்று நோய் உண்டாக்கும் கிருமி. யாரும் உங்களைக் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைக்கிறீர்களா?
சக கார்யகர்த்தாவை மதிப்பது முக்கியமானது. ஆனால் சொந்த கார்யகர்த்தாவையே விமர்சிக்கும் போக்கும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். பாஜகவின் நிர்வாகிகளால் பாஜக டிரோல் செய்யப்படுகிறது என காயத்ரி தெரிவித்துள்ளார். அது போல் மற்றொரு ட்வீட்டில் காயத்ரி கூறியிருப்பதாவது: செல்வக்குமார் எப்போது பாஜக தலைவரானார் என்பது தெரியவில்லை. அவரும் அவருடைய ஆதரவாளர்களும் என்னை விமர்சிக்கிறார்கள்.
என்னை தலைவருக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் என்னை செல்வகுமார் டீம் சித்தரிப்பது ஏன்? எந்த கட்சியாக இருந்தாலும் என்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன். அவர்களுடைய தவறுகளிலிருந்து பாதுகாக்க தலைவரின் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் (செல்வகுமாரின் டீம்) டீம் என்னை அதிகளவில் தாக்கினாலும் அதைவிட நான் உங்களையும் உங்கள் வார் ரூமையும் நிறுவனத்தையும் எதுவாக இருந்தாலும் காட்டிக் கொடுப்பேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்..
கருத்துகள்