முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசமாகச் சிக்கிய ஊழல் பெருச்சாளியான மோட்டார் வாகன ஆய்வாளர் '

வசமாகச் சிக்கிய ஊழல் பெருச்சாளியான மோட்டார் வாகன ஆய்வாளர் 


'கட்டிங், கமிஷன், கலெக்க்ஷன்'  நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சம் மாதம் 60 லட்சம் டார்கெட் போட்டு  வசூல்செய்ய 25 புரோக்கர்கள் வசமாக சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்       (V&AC conducts joint surprise check at the O/o Road Transport Office, Motor Vehicle Inspector, Bhavani, Salem and seized unaccounted money of Rs.2,10,990/- were seized on 10.November.2022.)

ஈரோடு மாவட்ட வாகனப் போக்குவரத்துத் துறையில் கமிஷன் வசூலிக்கும் புரோக்கர்களை வைத்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்த பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு. ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை பகுதியில் இயங்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் சார்ந்த அதாவது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மாலை மாவட்ட   ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்  ராஜேஷ் தலைமையிலான காவல்துறை பணியாளர்கள்   அதிரடியாகச் சோதனை  நடத்திய போது, அங்கிருந்து யாரும் வெளியேறாதபடி முன், மற்றும்  பின்புறக் கதவுகள் அடைக்கப்பட்டு, 



அலுவலகத்திலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளருக்கும், இதர அலுவலர்களுக்கும் பணப்பட்டுவாடா செய்வதற்காக புரோக்கர்கள் காத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில் உட்புகுந்த போது 

லஞ்ச ஒழிப்புத் துறையினர் வந்திருப்பதை அறிந்த புரோக்கர்கள், அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த லஞ்சப் பணத்தை ஜன்னல் வழியாக தூக்கி வீசியதைக் கண்ட. காவல்துறை பணியாளர்கள்  வெளியே வீசிய பணத்தையும், ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ரூபாய் நோட்டுகளையும் சேகரித்த பின்னர், மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, வாகனப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், மற்றும் புரோக்கர்கள் பத்துக்கும் மேற்பட்டோரை சோதனையிட்டதில் கணக்கில் வராத ரூபாய். 2.10 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.




அதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, புரோக்கர்களாகச் செயல்பட்ட சந்தோஷ், வரதன் என்கிற வரதராஜ், சம்பு என்கிற சண்முகம், நல்லசாமி உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். புதிய வாகனங்களுக்கு எண் அளித்தல், வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனங்கள் புதுப்பித்தல், எஃப்சி வாகனங்களுக்கு சான்றளித்தல், கூண்டு கட்டிய வாகனங்களுக்கு அனுமதியளித்தல், கன்டெய்னர் லாரிகளுக்கு சான்றளித்தல் என பலத்தரப்பட்ட பணிகளுக்கும் அரசு நிர்ணயித்ததை விடப் பல மடங்கு கட்டணத்தை புரோக்கர்கள் மூலமாக மோட்டார் வாகன ஆய்வாளர்  சுகந்தி வசூலித்தது தெரிய வருகிறது. குறிப்பாக எல்எல்ஆர் வழங்க ரூபாய்.1000 முதல் 1500-ம், எஃப்சிக்கு ரூ.1000 முதல் 5000 வரையும், கன்டெய்னர் லாரிகளுக்கு சான்றளிக்க ரூபாய். 10,000 வரை, பாடி கட்டிய வாகனங்களுக்கு ரூபாய்.5,000, புதிய இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய்.2,000 முதல் 5,000 வரை வாகனங்களின் மாடலுக்கு ஏற்றவாறு  லஞ்சமாக வசூலித்துள்ளனர்.

பவானி, அந்தியூர் ஆகிய இரண்டு வட்டங்களிலுள்ள எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், பர்கூர், அம்மாபேட்டை, ஒலகடம் என 100 க்கும் மேற்பட்ட முக்கிய ஊர்களின் வாகனப்பதிவு தொடர்பான பணிகளுக்கு இந்த அலுவலகத்துக்குத்தான் வரவேண்டிய நிலை உள்ளது எனவே, இங்கு தினந்தோறும் அதிக லஞ்சம் வசூலாகும் எனக் கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு லட்சம் வரையிலும் லஞ்சம் கிடைக்கும் என்பதால் இங்கு பணியாற்ற வருவோரிடம் போட்டி நிலவி ஏலம் எடுத்து வருவது போல  கவனித்தால் தான் இங்கு நியமனம்  கிடைக்குமென்று கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் இங்கு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர்  சுகந்தி, இங்குள்ள 25 க்கும் மேற்பட்ட புரோக்கர்களின் உதவியுடன் லஞ்சம் வாங்கி கல்லா கட்டியது லஞ்ச ஒழிப்புத் துறையினரின்  விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   அனைத்து பதிவுகளையும் ஆன்லைனில் தான் மேற்கொள்ள வேண்டும் என அரசு  அறிவித்தாலும், ஆன்லைனில் பதிவு செய்திருக்கும் நபர்களை புரோக்கர்கள் மூலம் அணுகி அவர்கள் பணியை முடிக்க கூடுத்ல் தொகையை லஞ்சமாகப் பேசி முடிவு செய்கிறார்கள். பணம் இல்லாவிட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது என  கேட்ட தொகையை கொடுப்பவர்களுக்கே பணியில் முன்னுரிமை உண்டாம். இதனால் கடுப்பான சிலர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தந்த நிலையில், திடீர் சோதனை நடத்தி இங்கு நடக்கும் லஞ்ச ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத் துறையினர். சோதனை  குறித்து மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும்  லஞ்ச ஒழிப்புத் துறை  துணைக் கண்காணிப்பாளர்  ராஜேஷ் செய்தியாளர்களின் மத்தியில்  சதெரிவித்ததாவது, ``  வாகனப்பதிவு பணிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஆன்லைனில் கட்டினாலும் அவர்களுக்கு சான்றுகள் வழங்கப்படுவதில்லை. புரோக்கர்கள் மூலம் ரேட் பிக்ஸ் செய்பவர்களுக்கு மட்டுமே பணிகளை செய்து வருவதாகவும், புரோக்கர்களை தவிர்ப்பவர்களுக்கு ஏதாவது காரணம் சொல்லி அவர்களது விண்ணப்பங்களை நிராகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் ரெய்டு நடத்தியதில் ஒரேநாளில் ரூபாய்.2.10 லட்சம் லஞ்சப்பணம் சிக்கியது. தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சந்தோஷ், சுகந்தியின் டிரைவராகவும், சம்பளம் வாங்கி கொண்டு புரோக்கர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் ஏஜென்டாகச்  செயல்பட்டு வந்திருக்கிறார். இதுதவிர வரதன், சண்முகம் ஆகியோரும் முக்கியமான புரோக்கர்களாகச் செயல்பட்டிருக்கின்றனர்.சுமார் 50 கி.மீ. சுற்றுப் பரப்பளவில் வாகனப்பதிவு தொடர்பான பணிகளுக்கு இந்த அலுவலகத்தைத் தான் தேடி வருகின்றனர். பணம் தராதவர்களை இழுத்தடித்தால் அவர்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது என்பதால் கேட்ட தொகையை புரோக்கர்களிடம் கொடுத்து பணியை முடிக்கப் பார்க்கிறார்கள். மாதம் சராசரியாக ரூ.15 லட்சத்துக்கும் மேல் பணம் வசூலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவே, சுகந்தி உள்பட 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் சுகந்தி உள்ளிட்ட ஐந்து பேரின் வீடுகளிலும் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். தற்போது 

மேலும்  மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தியை சஸ்பெண்ட் செய்யுமாறு மண்டல போக்குவரத்துத் துறை  ஆணையருக்கு, ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பரிந்துரைத்துள்ளதன் படி அவர் பணி இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...