முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படத் தொழில் துறையில் புதிய எல்லைகளைக் கண்டறிவதற்கான திரைப்பட தொழில்நுட்ப கண்காட்சி

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், திரைப்படத் தொழில் துறையில் புதிய எல்லைகளைக் கண்டறிவதற்கான திரைப்பட தொழில்நுட்ப கண்காட்சி


கோவாவில் நாளை  முதல் வரும்  28 ந்தேதி  வரை நடத்தப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா 2022, இந்த ஆண்டு திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு புதிய மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் திரைப்படக் கலை/சினிமா மற்றும் அழகியல் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு கூறுகளைப் பறைசாற்றும்  ஒரு கண்காட்சிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 21 முதல் 27 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கலா அகாடமிக்கு அருகில் உள்ள டிபி சாலையில் உள்ள கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் 7000 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு அளவுகளில் 20 அரங்குகள் இடம்பெறும்.

சோனி, கேனான், ரெட், லைக்கா, அல்டாஸ், டிஜோ, அபுச்சர் லைட்ஸ், ஹன்சா சினி எக்யூப்மென்ட் போன்ற முன்னணி சினிமா உபகரண உற்பத்தியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இக்கண்காட்சியானது சமகால சினிமா தயாரிப்பில் தொழில் வல்லுனர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்களை காட்சிப்படுத்தும். கண்காட்சி அரங்கில் கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு அமர்வுகளுக்கான பிரத்யேக இடங்களும் இருக்கும்.          53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற நிகழ்ச்சியாக மாறுகிறது

கோவாவில் நாளை முதல் வரும் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ள 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை அனைவரும் தடையின்றி அணுக வகை செய்திருப்பது, அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.  விழா நடைபெறும் இடத்தை தடையற்றதாக மாற்றுவதற்கான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளும் எளிதில் அணுகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்புப் பிரிவு, சினிமாவை அனைவரும் அணுகக்கூடிய பாதையாக மாற்றுவதற்கான ஒரு படியாகும். இந்தப் பிரிவில், மாற்றுத்திறனாளி  பார்வையாளர்களுக்கான பிரத்யேக காட்சிகளுக்கு, அவர்களின் அணுகல் தேவைகளை மனதில் கொண்டு ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.



இந்தப் பிரிவில் உள்ள திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் ஆடியோ விளக்கங்கள் இருக்கும். ஆடியோ விளக்கங்கள் என்பது ஒரு படத்தில் உள்ள காட்சித் தகவலை விவரிக்கும்..

 ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஆஸ்கார் விருது பெற்ற காந்தி, அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் போன்ற படங்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் திரையிடப்படும், அவை ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும்.


கலையை உருவாக்கும் செயல்முறை அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இலவச படிப்புகளை நடத்துகிறது - இது ஆட்டிசம் உள்ளவர்களுக்கான ஸ்மார்ட்ஃபோன் திரைப்படம் தயாரிப்பதற்கான அடிப்படைப் பாடமாகும்.


திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களின் வளாகங்கள், சரிவுகள், கைப்பிடிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு   ஏற்ற தொட்டுணரக்கூடிய நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், மறுசீரமைக்கப்பட்ட கழிவறைகள், பிரெய்லியில் வழிகாட்டு பலகைகள் போன்ற வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...