பிரபல தமிழ் திரைப்பட உரையாடல் எழுத்தாளர் ஆரூர்தாஸ் காலமானார்.
சில மாதங்களுக்கு முன் திரைத்துறையில் இவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக கடந்த ஜூன் மாதம் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி்ச் சிறப்பித்தது.
இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழை ஒழுங்காக எழுதவோ, பேசவோ தெரியவில்லை. என்ற நிலையில் இவர் குறித்து இந்த தலைமுறையினர் அறியவில்லை, ஆரூர் தாஸ் எழுதி கலைஞர் சக்தி கிருஷ்ணசாமி காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி என்று இரட்டைக் குதிரையில் சவாரி செய்தவர். கடைசியில் நடிகை லட்சுமி வழக்குறைஞராகக நடித்த படம் இவருடைய வசனம் காரணமாகவே ஓடியது தற்போது வயது 91.ல் சென்னை - தியாகராய நகரிலுள்ள இல்லத்தில் நேற்று (நவம்பர் 20) மாலை 6.40 மணி அளவில் அவர் காலமானார்.
1955 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் அவர் வசனங்கள் சிறப்பாக எழுதியுள்ளார் . சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்த படத்திற்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார் தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91. சென்னை - தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 20) மாலை 6.40 மணி அளவில் அவர் காலமானார். கடந்த ஜூனில் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.
தமிழ்த் திரையுலகின் பேராளுமைமிக்க ஆரூர்தாஸ். தனது 25 வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர், பாசமலருக்கு உரையாடல் எழுதியபோது 27 வயது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல ஜொலித்தார்.
பெரும்பாலும் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்குமாக 500 படங்களுக்கும் மேலாக கதை,திரைக்கதை, வசனம் எழுதியவர்.
"அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவர்களுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நல்ல நல்ல வசனங்களை எழுதியவர்" என்று நடிகர் திலகம் சிவாஜியால் பாராட்டப்பட்டவர்.
தாய் சொல்லைத் தட்டாதே படப்பிடிப்பின் தொடக்கம். கதாநாயகனுக்குத் தந்தையில்லை. கதாநாயகிக்குத் தாயில்லை. வசனம் ஆரூர்தாஸ்.
"எங்க அப்பா இறந்ததிலிருந்து எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்திலேயேயும் பங்கெடுத்துக்கிறது கிடையாது.
பொதுவா கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க.
ஆனா நான் விடிஞ்சதும், எங்க அம்மா முகத்தில் தான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்குது.
எனக்குத் தாய்தான் தெய்வம். அந்தத் தாய் சொல்லைத் தட்டமாட்டேன் "
இந்த வசனத்தை எம்ஜிஆரிடம் தாஸ் சொன்னதும்- "எந்த நோக்கத்துல எதுக்காக இந்த இடத்துல இந்த வசனத்தை எழுதி இருக்கீங்க?" என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார்.
"ஒரு பிள்ளைக்குத் தன் தாய்கிட்டே இருக்கிற பாசத்தைச் சொல்லி தாய்மையைப் பெருமைப்படுத்துறதுக்கும் தாய் சொல்லைத் தட்டாதே அப்படிங்கிற படத்தோட பெயரைக் கதாநாயகன் வாயிலேயே சொல்ல வைக்கிறதுக்காகவும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கிட்டு இப்படி எழுதினேன்" என்கிறார் ஆரூர் தாஸ்.
"நீங்க முற்போக்கு எண்ணம் கொண்டவரா?" என்று கேட்ட எம்ஜிஆரிடம்.
"ஆமா தெருவுல போற ஒருத்தன், ஒரு கைம்பெண்ணைக் கண்டு ஒதுங்குனா, கண்டிப்பா அவனை அடிக்க நான் தயங்கமாட்டேன். அடிப்பேன்"
ஆரூர் தாஸ் சொல்லச் சொல்ல. உணர்ச்சி வசப்பட்ட எம்ஜிஆர், சட்டென்று அவரைப்பிடித்து இழுத்து தன் மார்போடு அணைத்து, தோளில் தட்டிக் கொடுத்து,
"இந்த வசனம் என்னை வச்சி எனக்காக எழுதுன மாதிரி இருக்கு. அதுக்கு நீங்க சொன்ன விளக்கம் பொருத்தமாகவும் எனக்குப் பொருந்துற மாதிரியும் இருக்கு.
என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா தெரியாதோ ஆனாலும் சொல்கிறேன்.
எனக்குத் தாய்தான் தெய்வம். அதனால்தான் உங்க வசனத்தை கேட்டுக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்
ஒரு சமூகப் படத்துல இப்படிச் சின்னச் சின்ன சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்ல முடியும். சொல்லணுங்குறதை உங்க எழுத்து எடுத்துக்காட்டுது.
மிக்க மகிழ்ச்சி. மதியம் என்னுடன் நீங்க சாப்பிடணும் போய்டாதீங்க" என்றாராம். இப்படி பல சுவையான சம்பவங்கள் அவர் வாழ்வில் உண்டு.
1955 முதல் 2014 வரையில் அவர் வசனகர்த்தாவாக இயங்கியுள்ளார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்த படத்திற்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், சுமார் 1000 திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரினான ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும்
நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்