தொழில்நுட்ப ஜவுளி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்படவேண்டும்
தொழில்நுட்ப ஜவுளி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். உலக தரத்திலான நவீன ஜவுளி இயந்திரங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவை குறித்து ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ஆய்வகங்களை நவீன மயமாக்குவதில் இந்திய தர நிர்ணய அமைப்பு, ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜவுளி தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமைகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில் நித்தி ஆயோக்கின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் திரு வி கே. சரஸ்வத், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கருத்துகள்