மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளில் முறைகேடு திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி பணி நீக்கம்
மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளில் முறைகேடு திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி பணி நீக்கம்
திருவண்ணாமலை மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளில் தவறுகள் நடந்தி குப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவண் ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதியை பணி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி யாக பணியாற்றி வந்தவர் எம்.கே. ஜமுனா. இவர் பணிசெய்த காலத்தில் பல்வேறு குற் றச்சாட்டுகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்பாக எழுந்த புகார்க ளின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது. அதன டிப்படையில் எம்.கே. ஐமுனாவை பணிநீக்கம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை
உயர்நீதிமன்றப் பதிவாளர், திருவண்ணாமலை நீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த உத்தரவு நீதிபதி எம்.கே. ஜமுனாவிடம் ஒப்படைக்கப் பட்டது. ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்த போது விபத்து இழப்பீட்டு வழக்குகளில் தவறுகள் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும், திருவண்ணாலை யில் பொறுப்பேற்ற பிறகு விபத்து வழக்கு விசாரணையில் தவறுகள் நடத்திருப்பதற் கான முகாத்திரங் கள் இருப்பதாகக் கூறப்படுவதன் எதிரொலியாகவே இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. நீதிபதி பணி நீக்கம் செய்யப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் எம். கே. ஜமுனா பங்கேற்கவில்லை,
திருவண்ணாமலையில் நீதிபதி டிஸ்மிஸ் செய்யப் பட்ட சம்பவம் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறது.
கருத்துகள்