வடசேரி அரசு இரப்பர் தோட்டக் கழகத்தில் நிர்வாக இயக்குனர், இரப்பர்பால் ஏலம் எடுக்க இரண்டரைக் கோடொ லஞ்சம் கேட்ட வழக்கு அடுத்த வாரம் தள்ளிவைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டம் வடசேரியில் உள்ள அரசு இரப்பர் தோட்டக் கழகத்தில் நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் வனத்துறையின் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இரப்பர் தோட்ட தொழிலாளர்களால் தான் ரப்பர் கழகம் முழுமையாகச் செயல்படுகிறது.
ஆனால் இக் கழகம், தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. அதிகாரிகள் இரப்பர் மரங்களை வெட்டி காண்டிராக்டர்களுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது . சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒஃகி புயலில் சேதமடைந்த இரப்பர் மரங்களை காண்டிராக்டர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் முறைகேடாக வெட்டியதைப்
போல் சமீபத்தில் இரப்பர் மரங்களில் பால் எடுக்கும் ஏலம் விடுவது சம்பந்தமாக அறிவிப்பு வெளியானதில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் சின்டிகேட் முறையில் பேரம் பேசுவது காணொளிக் காட்சி பதிவாகியது. இது சட்டவிரோதம். இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இரப்பர் மரங்களில் பால் எடுக்கும் ஏல அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக மறு ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.
என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞர் சி.டி.பெருமாள் ஆஜராகி, ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை கமிஷனாகத் தர வேண்டுமென ஏல ஒப்பந்த தாரர்களிடம், மாவட்ட வனத்துறை சார்ந்த ஐ.எப்.எஸ். அதிகாரிகள் கேட்பது, போன்ற காணொளிக் காட்சி வெளியாகியுள்ளதில் ரூ.5 கோடி ஏல தொகையில் பாதித் தொகையான (ரூபாய்.2½ கோடியை) இலஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். உயர்ந்த பதவிகளில் உள்ள அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார்.
அதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுத் தெரிவிக்கும் படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30- ஆம் தேதிக்கு மாற்றி வைத்தனர். இந்தியாவில் இரப்பர் தோட்ட வாரியம் 1947-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. இரப்பர் தொழிலை மேம்படுத்த இரப்பர் பற்றிய ஆராய்ச்சி, மற்றும் பயிற்சி, பயிரிடுவோர்க்கு ஆலோசனைகளை வழங்கிட, வியாபபாரம் செய்ய உத்திகள் வகுக்க, தொழிலாளர்களுக்கு உதவிட இது தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் இரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருடத்திற்கு 24,020 டன் இரப்பர் பால் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. கேரளாவில் இந்திய உற்பத்தியில் 92 ,சதவீதம் கிடைக்கிறது. எனவே தமிழ்நாட்டு இரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கேரளாவிலிருந்து இரப்பரை வாங்குகின்றனர். 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 7.20 லட்சம் டன் இரப்பர் பால் உற்பத்தியாகிறது. இப்பொழுது தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மரங்கள் நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இரப்பர் தோட்ட வாரியம் இரப்பர் மரம் நடுவதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல உதவிகள் செய்கிறது. இரப்பர் அறுவடை செய்ய நவீன பயிற்சி, ஷீட் இரப்பராக மாற்ற பயிற்சி, தரம் பிரிக்க பயிற்சி இன்ஸ்டிடியூட் எனும் பயிற்சி நிறுவனத்தையும்துவங்கியுள்ளது. தேசிய இரப்பர் மாநாடு நடத்துதல், தர மேம்பாட்டுக்குறிய நடவடிக்கை, தொழில்நுட்பம் சார்ந்த உதவி, ஊழியர்களுக்கு உதவும் திட்டம், ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய உதவிகள், விலை நிர்ணயம் என பல்வேறு உதவிகளையும் செய்கிறது. : இரப்பர் மரம் என்பதன்
தாவரவியல் பெயர் : ஹீவியா பிரேசிலியன்சிஸ்
இதுவே ஆங்கிலத்தில் : Rubber Tree
:கரிசல் மண்ணில் வளரும் மரத்தின்
தாவரக் குடும்பம் : இயுஃபோர்பியேசியே எனவாகும்.
தாவரங்கள் தங்களிடமிருந்து வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று தான் இரப்பர் பால்.
என்பது கோந்து, எண்ணெய், புரோட்டீன், அமிலங்கள், உப்புகள், சர்க்கரை, ஹைட்ரோ கார்பன் முதலியவை கலந்தது தான். இரப்பர் பாலுக்கு லாடெக்ஸ் எனப் பெயர். இரப்பர் பாலின் நிறம் வெள்ளை தான் என்றாலும், பருவ காலத்துக்குத் தகுந்தாற் போல் அது மஞ்சளாகவும் வெளிர் ஆரஞ்சாகவும், சாம்பல் நிறத்திலுமிருக்கும்.
இரப்பர் மரம் 18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளரும். 2 முதல் 3 மீட்டர்கள் கொண்டசுற்றளவிருக்கும்.
வளர்ந்து ஏழாவது வருடத்திலிருந்து பலன் தரும், சுமார் 50 வருடங்களுக்கு இரப்பர் பால் சேகரிக்கலாம். ஒரு ஆண்டில் ஒரு மரத்தில் 150 வெட்டு வாய்களை உண்டாக்கலாம்.அடி மரத்தின் மேலும் கீழும் சுமார் 35 செ.மீ. விட்டு விட்டு மற்றப் பகுதிகளில் இந்தக் கீறல்களை உண்டாக்கலாம்.
10 வருடங்களில் அதன் பட்டை மறுபடியும் வளர்ந்துவிடும். ஒரு கூரிய கத்தியால், சுமார் 1.25 செ.மீ. கனத்துக்கு இரப்பர் மரத்தின் பட்டை அகற்றப்பட்டு அதில் ஓர் உலோகக் கிண்ணம் பொருத்தப்படுகிறது. அதில் பால் வடிகிறது.
சேகரிக்கப்பட்ட பால், நீர் நீக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுகிறது.பென்சில் கோடுகளை அழிக்கும் இரப்பர் .
உள்ளிட்ட மழைக்கோட்டுகள் கூடத் தயாரிக்கலாம்.
இரப்பர் மரப் பட்டையில் இருந்து எடுக்கப்படும் பால் இரப்பர் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
காலனிகள், விளையாட்டு பொருட்கள், பந்துகள் மற்றும் பொம்மைகள் மற்றும்
டயர் தயாரிக்க இரப்பர் பால் பயன்படுகிறது. துவக்க காலத்தில் தென் அமெரிக்காவின் பகுதியில், இரப்பர் உருண்டைகளைக்க் கண்டனர். அங்கு, ஒரு வகை மரத்தில் வழிந்த பாலைச் சேகரித்தனர்
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், 1490 ஆம் ஆண்டில், இந்த உருண்டைகளைக் கண்டார்.
கருத்துகள்