கோயமுத்தூர் பரபரப்பு இலஞ்சத்தை வாங்கிக்கிட்டு ஜாமீன் தரலேன்னா எப்படி ? என்ற பெண் ஆவேசமான கேள்விக்கு நீதிபதி அதிர்ச்சியடைந்தார்
நீதிபதி பெயரைச் சொல்லி ஏமாற்றி 25 ஆயிரம் வாங்கிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.
: ஒரு விபசார வழக்கில், கணவருக்கு ஜாமீன் எடுக்கக் கேட்ட பெண்ணிடம், நீதிபதி பெயரைச் சொல்லி ஏமாற்றி இலஞ்சம்
வாங்கிய வழக்குரைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோயமுத்தூர் பீளமேட்டில் விபசார வழக்கு ஒன்றில் முகமது ரியாஸ் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல்துறை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி வஜாஜெசிகா, சென்னையைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் (வயது 39) என்ற வழக்குறைஞரைச் சந்தித்து, அவரது கணவருக்குச் ஜாமீன் பெற்றுத் தருமாறு கூறியுள் ளார். இந்த வழக்கில் ஆஜ ராவதாகக் கூறிய எட்வின் ஜெயக்குமார். முதலில் ரூபாய். பத்தாயிரம் வாங்கியுள்ளார். பின்னர் ஜாமீன் வாங்க வேண்டும் என்றால் நீதியதிக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறி முன்பணமாக ரூபாய் .25 ஆயிரம் வாங்கியுள்ளார்.
இந்தநிலையில், முகமது ரியாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடத்தது. விசாரணைக்குப் பின்னர், ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதனால், அவரது மனைவி ஆத்திரமடைந்து, சத்தமாக "லஞ்சத்தை வாங்கிக்கிட்டு இப்போ ஜாமீன் தரலேன்னா எப்படி என்று நீதிபதியிடம் ஆவேசமாகக் கேட்டார். இந்தத் திடுக்கிடும் குற்றச்சாட்டைக் கேட்டு, நீதி மன்றத்தில் இருந்தவர்களுடன் நீதியதியும் ஒருகணம் திகைத்து, எழுந்து நின்றார். பின்னர், அந்தப் பெண்ணிடம், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டார். அப் போது அவர், "என் கணவரை ஜாமீனில் எடுக்க வக்கீலை அணுகினேன். முதல் தடவையாக ரூபாய். 10 ஆயிரம் கொடுத்தேன். அதன் பிறகு, நீதிபதிக்கு லஞ்சம் கொடுத் தால், ஜாமீன் கிடைத்துவிடும். எனவே. ரூபாய்.50 ஆயிரம்
வேண்டும் என்று வக்கீல் கேட்டார். அதன் படி, என்னிடம் ரூபாய் .25 ஆயிரம் வாங்கினார். ஆனால், இப்போது, ஜாமீன் கிடைக்கவில்லை" என்று பரபரப்புடன் கூறி
னார். அவர் கூறியதைக் கேட்டதும், நீதிமன்றமே சில நொடிகளுக்கு நிசப்தமானது. அதனைத் தொடர்ந்து, - கோர்ட் தலைமை எழுத்தர் ராஜேஸ்வரி, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் எட்வின் ஜெயக்
குமார் மீது புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு - செய்து, வழக்குறைஞரைக் கைது செய்தனர்.
கருத்துகள்