5-ஜி தொலைத் தொடர்பு சேவை
நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இதுவரை 5-ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022, அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கடந்த 2022 நவம்பர் 26-ம் தேதி வரை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 50 நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டிருக்கிறது. அதிவேக தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஏதுவாக மத்திய அரசு பின்வரும் கொள்கை நடவடிக்கைகளை முன்னிறுத்தி வருகிறது.
செல்ஃபோன் தொலைத்தொடர்பு சேவையை தங்கு தடையின்றி வழங்க ஏலம் மூலம் அலைவரிசை ஒதுக்கீடு
அலைவரிசை பங்கீடு மற்றும் வணிகத்திற்கு அனுமதி
அலைவரிசை பங்கீட்டிற்கான கூடுதல் அலைவரிசை பயன்பாடு கட்டணம் 0.5 சதவீதம் நீக்கம்
தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அனுமதி
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.குறைமின்கடத்தி சிப்-கள் தயாரிப்பு
உலகளாவிய செமிகண்டக்டர் வினியோகச் சங்கிலியில் இந்தியாவை முக்கியப் பங்குதாரர் நாடாக மாற்ற வேண்டும் என்றும் உயர்- தொழில்நுட்ப, உயர்தர மற்றும் மிகுந்த நம்பகத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. செமிகான் இந்தியா மாநாடு திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. குறைமின்கடத்திகளை அதிகமாக பயன்படுத்தும் நாடுகள் வழங்கும் ஊக்கத்தொகைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் சில மாறுதல்கள் கொண்டுவரப்படவுள்ளது. இதன் அடிப்படையில் குறைமின்கடத்திகளை அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வது, உற்பத்தி மற்றும் வடிவமைப்பு செயல்பாடுகளில் உதவி செய்வது போன்றவைகள் செய்துத்தரப்படும்.
குறைமின்கடத்தி துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலை விளக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
வர்த்தகத்திற்கு உகந்த சூழலை வழங்குவதற்காக சிறந்த முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.
இதுசம்பந்தமாக புதிதாக உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கி பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.
செமிகான் இந்தியா மாநாடு திட்டத்தின் எதிர்கால வடிவமைப்பின் கீழ் குறைமின்கடத்தி மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும். மேலும் 5 வருட காலங்களில் மொத்த விற்பனை 6 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு ரூ.30 கோடி வழங்கப்படும். மொஹாலியில் குறைமின்கடத்திக் கூடத்தை நவீனமயமாக்குதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் இழப்புகள்
தொலைத்தொடர்பு சேவையை விரிவாக்கம் செய்வதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவை புரிவதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள், மத்திய அரசின் குடிமக்களை மையப்படுத்திய திட்டங்களை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பதில், முக்கியமானதாகத் திகழ்கின்றன.
கடந்த 2022, செப்டம்பர் 9-ம் தேதி வரையிலான கணக்குகளின்படி, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் 24,58,827 தொலைத்தொடர்பு இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் தற்சார்புக்கான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 4-ஜி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்காக ஒரு லட்சம் இடங்களுக்கு 2022 அக்டோபர் மாதம் டெண்டர் விடப்பட்டது.
குறிப்பிட்ட இடங்களில் 4-ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்க இயலாமல் போனது, தனியார் நிறுவனங்களின் கடும்போட்டி, கடன் நிதிச்சுமை கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு கடுமையாக அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.57,671 கோடிகளையும், எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.14,989 கோடிகளும் இழப்பாக சந்தித்துள்ளன. கடந்த 2022 மார்ச் 31ம் தேதி வரை அவ்விருநிறுவனங்களும் இத்தகைய இழப்பை சந்தித்துள்ளன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்