ஸ்ரீ ஸ்வாமிநாராயண் குருகுல ராஜ்கோட் சன்ஸ்தானின் 75வது அமிர்தப் பெருவிழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்
"மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக அவர்களது மனதையும் இதயத்தையும் நல்ல எண்ணங்கள், நற்பண்புகளுடன் குருகுலம் மேம்படுத்தியுள்ளது"
"உண்மையான அறிவைப் பரப்புவது உலகின் தலையாய பணியாகும். இந்த திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது”
"ஆன்மிகத் துறையில் அர்ப்பணிப்புள்ள மாணவர்கள் முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள் வரை, குருகுலத்தின் பாரம்பரியம் நாட்டின் ஒவ்வொரு துறையையும் வளர்த்து வருகிறது"
"இந்திய வாழ்க்கை முறையில் புதிய கண்டுபிடிப்பும் ஆராய்ச்சியும் ஒருங்கிணைந்த பகுதியாகும்"
"நமது குருகுலங்கள் அறிவியல், ஆன்மீகம், பாலின சமத்துவம் ஆகியவற்றுடன் மனிதகுலத்தை வழிநடத்துகின்றன"
"நாட்டில் கல்வி உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பணிகள் நடந்து வருகின்றன"
மூலம் அவர்கள் எளிதாகக் கல்வி பெற முடியும் என்றார்.
அறிவை வாழ்வின் மிக உயர்ந்த நோக்கமாகக் கருதும் இந்திய பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் பிற பகுதிகள் அவர்களின் ஆட்சி வம்சங்களுடன் அடையாளம் காணப்பட்டபோது, இந்திய அடையாளம் அதன் குருகுலங்களுடன் இணைக்கப்பட்டது என்றார். "நமது குருகுலங்கள் பல நூற்றாண்டுகளாக சமத்துவம், கவனிப்பு, சேவை உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன" என்று அவர் கூறினார். இந்தியாவின் புராதன மகிமைக்கு இணையான நாலந்தா, தக்ஷிலா ஆகியவற்றை அவர் நினைவு கூர்ந்தார். “புதிய கண்டுபிடிப்பும் ஆராய்ச்சியும் இந்திய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக இருந்தது. சுய கண்டுபிடிப்பிலிருந்து தெய்வீகம், ஆயுர்வேதம் முதல் ஆதித்யம் (ஆன்மிகம்), சமூக அறிவியல் முதல் சூரிய அறிவியல், கணிதம் முதல் உலோகம் , பூஜ்ஜியத்திலிருந்து முடிவிலி வரை ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சி மற்றும் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. "இந்தியா, அந்த இருண்ட யுகத்தில், நவீன அறிவியலின் உலகப் பயணத்திற்கு வழி வகுத்த ஒளிக் கதிர்களை மனிதகுலத்திற்கு வழங்கியது" என்று அவர் கூறினார். இந்திய புராதன குருகுல முறையின் பாலின சமத்துவம் மற்றும் உணர்திறனையும் எடுத்துரைத்த பிரதமர், ‘கன்யா குருகுலம்’ தொடங்கியதற்காக சுவாமிநாராயண் குருகுலத்தைப் பாராட்டினார்.
இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வி அமைப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்கை வலியுறுத்திய பிரதமர், விடுதலையின் அமிர்த காலத்தில் ஒவ்வொரு நிலையிலும் நாட்டில் கல்வி உள்கட்டமைப்பு மற்றும் கொள்கைகளை மேம்படுத்துவதற்கு நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்றார். நாட்டில் உள்ள ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது அறுபத்தைந்து சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையின் மூலம், நாடு எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையைத் தயாரித்து வருகிறது. இதன் விளைவாக, புதிய முறையில் கல்வி கற்கும் புதிய தலைமுறையினர் நாட்டின் சிறந்த குடிமக்களை உருவாக்குவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த 25 ஆண்டு கால பயணத்தில், ஜெயின் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். “இன்று இந்தியாவின் முடிவுகளும், அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளும் புதியவை. இன்று நாடு டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, உள்ளூர் உற்பத்திக்கு குரல் கொடுத்தல், ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பார்வையுடன் முன்னேறி வருகிறது. சமூக மாற்றம், சமூக சீர்திருத்த திட்டங்களில் அனைவரின் முயற்சி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும். குருகுல மாணவர்கள் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு வடகிழக்கு இந்தியாவுக்குப் பயணம் செய்து, தேசத்தை மேலும் வலுப்படுத்த மக்களுடன் இணைய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளைத் தொட்டு, ஒரே பாரதம் உன்னத பாரதத்தை வலுப்படுத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவின் தீர்மானங்களின் இந்தப் பயணத்திற்கு சுவாமிநாராயண் குருகுல வித்யா பிரதிஷ்டானம் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து வலுவூட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுல ராஜ்கோட் சன்ஸ்தான் குருதேவ் சாஸ்திரிஜி மகராஜ் ஸ்ரீ தர்மஜீவன்தாஸ்ஜி சுவாமிகளால் 1948 இல் ராஜ்கோட்டில் நிறுவப்பட்டது. சன்ஸ்தான் விரிவடைந்து தற்போது உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது, 25,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி, இளங்கலை மற்றும் முதுகலை கல்விக்கான வசதிகளை வழங்குகிறது.
கருத்துகள்