முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசி இந்துப் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்களுடன் ரயில்வே அமைச்சர் கலந்துரையாடல்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் திரு அஷ்வினி வைஷ்ணவ் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்

சென்னை, மதுரை உள்பட 50 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்- ரயில்வே அமைச்சர்

ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும்   தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் இன்று வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஐஐடி  மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பிரதமர் தலைமையில், முதலில் நாடு, எப்போதும் நாடே முதல் என்ற உணர்வுடன்  உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.  பல்வேறு நகரங்களின்  ரயில் நிலையங்களில் அந்த நகரத்தின் அடையாளம் தெளிவாகத் தெரிய வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.



பொதுவாக, நகரின் இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் ரயில் நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர்,  இதை நிறைவேற்றும் வகையில் ரயில் நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதனுடன், காத்திருப்பு பட்டியல்கள், இடையூறுகள் மற்றும் ரயில் இயக்கங்களில் ஏற்படும் தாமதங்களிலிருந்து மக்களை விடுவிக்கும் வகையில், திறன்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன, என்று அவர் கூறினார்.

 பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் ரயில் மற்றும் மின்னணு உள்ளிட்ட பிற துறைகளில் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருந்தது. இன்று, இந்திய பொறியாளர்களின் ஆதரவுடன்,இந்த துறைகளில் பெரிய அளவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என திரு வைஷ்ணவ் கூறினார்.

நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு  ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும் என்று திரு வைஷ்ணவ் தெரிவித்தார். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரணாசி சந்திப்பு, காசி ரயில் நிலையம் ஆகியவை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அடுத்த 50 ஆண்டு கால தேவைகளை கருத்தில் கொண்டு இந்த நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அகமதாபாத், காந்திநகர், சார்பாக் லக்னோ, சென்னை, பெங்களூரு கண்டோன்மென்ட், மதுரை உள்ளிட்ட 50 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றில் 45 ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதையும்  இணைக்கும் வகையில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற  பிரதமரின் தொலைநோக்கு பார்வையை காசி தமிழ் சங்கமம் நிறைவேற்றுகிறது என்றார்.

முன்னதாக, பண்டிட் மதன் மோகன் மாளவியா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக தற்போது இந்தியா மாறியுள்ளது என்று திரு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். மொபைல் கோபுரங்கள் மற்றும் 5ஜி தொழில்நுட்ப  வசதிகள் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மாணவர்கள் முன்வரவேண்டும் என்று  அவர் கேட்டுக்கொண்டார்.

5ஜி துறையிலும் பணிகள் வேகமாக நடந்து வருவதாக கூறிய திரு வைஷ்ணவ்,  நாட்டில் உள்ள 100 பல்கலைக்கழகங்களில் 5ஜி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது ஒவ்வொரு வாரமும் 2500,  5ஜி கோபுரங்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்,   அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் வாரந்தோறும் 10,000 கோபுரங்களை அமைக்குமாறு   பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த தீபாவளிக்குள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 5ஜி கட்டமைப்பு  சென்றடையும் என்று அமைச்சர் உறுதியளித்தார்   

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி “காசி தமிழ்ச் சங்கமம் விரைவு ரயில்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

காசி தமிழ்ச் சங்கமம் பயணத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த குழுவினருக்கு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே ‘காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே, தொலைத் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். வாரணாசி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டும் மறுசீரமைப்புத் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

திரு அஸ்வினி வைஷ்ணவ் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற எட்டாவது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் அவர்களுக்கு கிடைத்த உபசரிப்புக் குறித்தும் அவர்கள் விளக்கி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக (ஐஆர்சிடிசி) குழுவினரின் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். இதுபோன்ற மக்களிடையேயான பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது மரபுகள், அறிவு மற்றும் கலாச்சாரத்தில் பிணைப்பை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இந்த இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வை நினைவு கூரும் விதமாக காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே ‘காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், விரைவில் இந்த ரயில் சேவை தொடங்கும் என்றும் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

வாரணாசி சந்திப்பு ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புத் திட்டங்களையும் மத்திய ரயில்வே அமைச்சர் ஆய்வு செய்தார். வருங்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பைத் திட்டமிடுமாறு அவர்  அறிவுறுத்தினார்.

வாரணாசி ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர், இந்த ரயில் நிலையத்தை விமான நிலைய முனையமாக மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். இந்த ரயில் நிலையத்தை உலகிலேயே சிறந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை அடுத்த 50 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டு முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார். வாரணாசி நகரப் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதை எளிதாக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் 75-வது ஆண்டு விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சகத்தால் ஒரு மாத கால நிகழ்ச்சியான காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசியில் நடைபெறும் இந்தத் விழாவைக் காண பல்வேறு தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே அமைச்சகமும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமும் (ஐஆர்சிடிசி) நிகழ்ச்சிக்கு வருவோரை காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்தோம்பல் பணிகளை சிறப்பாகச் செய்து வருகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...