செங்கரும்பை பொங்கல் தொகுப்பில் சேர்க்கக்கோரி விவசாயிகள் சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பைச் சேர்க்க இன்று உத்தரவிட்டார்.கடந்தாண்டு ஒரு கரும்பிற்கு கொள்முதல் விலையாக 33 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளிடம் சென்று சேர்ந்தது அதிகபட்சமாக 13 ரூபாய் மட்டுமே. பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் தொகுப்பு குறித்து நான்கு முறை முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
ஆனால், நான்கு முறையுமே ஒரு தெளிவான முடிவு எட்டப்படவில்லை. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கில், தமிழகத்தில் விளையும் பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து வாங்காமல், தமிழக விவசாயிகளிடமிருந்தே வாங்க வலியுறுத்திய வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாய்தா மேல் வாய்தா வாங்கினார். ஆலைகளுக்கு செல்லும் கரும்பு விவசாயிகளுக்கு வங்கிகள் ரூபாய் 70 ஆயிரம் வரை கடன் வழங்குகிறது. ஆனால் செங்கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு எந்த வங்கியும் கடன் வழங்குவது இல்லை.
இதனால் வட்டிக்கு கடன் வாங்கி தான் விவசாயம் செய்து வரும் நிலை கடனை அடைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சமாக 40 ரூபாயாவது கரும்பிற்கு அரசு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் செய்வது போல, கரும்புகளையும் கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கி கணக்கில் பணத்தை முறையாக செலுத்த வேண்டும். இந்த வருடம் குறைந்தபட்சமாக 40 ரூபாய்க்கு ஒரு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்தாண்டு தமிழக அரசு தரமற்ற வெல்லத்தை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெல்லம் வழங்குவதைப் பற்றி தமிழக அரசு ஒன்றும் பேசாதது வருத்தம் அளிக்கிறது.தாமதமாக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
பொங்கல் தொகுப்பில் கட்டாயமாக பச்சரிசி, வெல்லம், கரும்புகள் வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மேலும் கரும்பு கொள்முதலில் நடந்த முறைகேடுகளை எதிர்கொள்ள முடியாததே இந்த அறிவிப்பின் தாமதத்திற்கு காரணம் ஆகும்" என்று தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சுவாமிமலை சுந்தர விமலநாதன் பேசுகையில், மேலும்"எடப்பாடி பழனிச்சாமி ஒரு குடும்ப அட்டைக்கு 2 அடி கரும்பை வழங்கினார். அதனை மாற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு குடும்ப அட்டைக்கு முழு கரும்பை வழங்க உத்தரவிட்டார் எனத் தெரிவித்தார் இதன் மூலம் செங்கரும்பு பதியனிட்டு சாகுபடி செய்த விவசாயிகள் பலனைவார்கள்.
கருத்துகள்