முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக ஊடகக் கணக்குகள் சரிபார்ப்பு கட்டாயமாகும்

சமூக ஊடகக் கணக்குகள் சரிபார்ப்பு கட்டாயமாகும்

சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அதே வேளையில், பொறுப்பற்ற நிலையில் பொதுத்தளத்தில் சட்டத்திற்கு புறம்பான தகவல்களை  பகிர்ந்தால் சட்டத்தின்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.  இதனை உறுதிசெய்வதற்கு தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  

 இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான நம்பத்தகுந்த சமூக ஊடகக் கணக்குகள் இருக்க வேண்டும் என்பதை அரசு முனைப்போடு செயல்பட்டு  அதற்கு செயலாக்கம் தரும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கொண்டு வரப்பட்டது.

(i)  பகிரப்படும் தகவல்கள் அறிந்தோ, அறியாமலோ,  தகவல்களை பெறுபவர்களை ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, மாற்றவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோக் கூடாது. பொய்யான, தவறாக வழிநடத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.

(ii) மேற்கூறியவற்றை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசு அல்லது அதன் அமைப்பு ரீதியிலான புகார் அல்லது நீதிமன்ற உத்தரவு அல்லது நோட்டீஸ் பெறப்பட்டதன் பேரில் தானாக முன்வந்து, தகவல்களை பகிரவோ, சேமிக்கவோ அல்லது வெளியிடவோக் கூடாது. அவதூறு, பொது மக்கள் நலன், கண்ணியம், ஒழுக்கம், மீறப்படும் போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.

(iii) சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க நிறுவனத்திடமிருந்து உத்தரவு கிடைத்தவுடன், சட்டத்தின் கீழ் தடுப்பு, கண்டறிதல், விசாரணை அல்லது வழக்குத் தொடர தகவல் அல்லது உதவி வழங்கப்படும்.

(iv) இது சம்பந்தமாக  புகாரளித்த 72 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும்.

இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில்  தெரிவித்துள்ளார்.சமூக ஊடகத் தளங்களில் ஆபாசம் மற்றும் தவறான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கை

சமூக ஊடகத் தளங்களில் ஆபாசம் மற்றும் தவறான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகளின் விளைவாக இணையதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பத்தகுந்த  சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

 ஆபாசமான மற்றும் தவறான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பினால் தகவல் தொழில்நுட்பச்  சட்டம் 2000-ன் கீழ் நடவடிக்கை, 3 முதல் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.  இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறுவர் ஆபாச உள்ளடக்கம் கொண்ட வலைதளங்களை மத்திய அரசு தொடர்ந்து தடைசெய்து வருகிறது. இணைய தள சேவை வழங்குபவர்களுக்கு எந்தெந்த வலைதளங்களில் என்னென்ன தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறித்து கண்காணிப்பு அவசியம் என்பதை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இணைய தளசேவை வழங்குபவர்களிடம் எந்தெந்த வலைத்தள தகவல்களை தங்களது குழந்தைகள் பார்க்கலாம் என்பது தொடர்பான அந்தந்தப் பெற்றோர்களுக்கு பிரத்யேகமான வசதியை செய்து கொடுக்க தொலைத்தொடர்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி பாதுகாக்கப்பட்ட இணையதளங்களை மட்டுமே கல்வி நிலையங்களில் பார்க்க முடியும்.

 இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில்  தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...