முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலஞ்சென்ற முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவுநாள்

ஒருவர் எதற்காக நினைவு கூறப்படுகிறார் என்பதில் தான் அவரது புகழ் அடங்கியுள்ளது..


எல்லோரும் ஏதோவொரு வகையில் நினைவுகூறப்படவேண்டும்.. அது எதைக் குறிக்கிறது என்பதை வைத்துத் தான் வரலாறு அவரைப்பற்றி பதிவு செய்கிறது..

ஒருவரின் அரசியல் வாழ்வைத் (பொதுவாழ்வு) தான் இந்த சமூகம் அவர் மீது கொண்டிருந்த அன்பை .. அல்லது வெறுப்பை சுட்டிகாட்டி அவர் ஆற்றிய பணிகள் நல்லவையோ  கெடுதிகளோ எதுவானாலும் வரலாற்றில் இடம் பெறும்.. இதில் பெண் ஆண் என்ற பாகுபாடில்லை.     காலஞ்சென்ற  முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆறாம்  ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு


அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க வின் தற்போதுள்ள தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடமருகில் அமைந்துள்ள ஜெ.ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான தொண்டர்கள் ஜெயலலிதாவின்   நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.வினர் நான்கு  அணிகளாகவும் தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.அ.தி.மு.க. வின்  முன்னால் முதல்வரும்,  தற்போது சட்டமன்ற எதிரகட்சித் தலைவருமான  எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.  உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பிக் கூறினார்கள். அப்போது, மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்றனர். 

எதிரிகள் ஒருபுறம், துரோகிகள் மறுபுறம் என்றிருக்கும் சூழல் பொய் வழக்குகளை முறித்து சதிவலைகளை அறுப்போம்.குடும்ப.  ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம். அதிமுக என்பது ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றி தழைத்து நிற்கும் ஆலமரம். இதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. அதிமுகவை கட்டிக்காப்போம்.இந்திய அரசியல் சரித்திர வானில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை மாற்றியவர் ஜெ.ஜெயலலிதா.





நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று வெற்றிக்கு சூளுரைப்போம்.நாற்பதும் நமதே நாளையும் நமதே என்று சபதம் ஏற்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று வெற்றி முழக்கமிட்டு திக்கெட்டும் வெற்றியை படைத்திடுவோம். அதற்காக அயராது உழைப்போம்.  கழகத்தின் வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம் என்று உறுதியேற்போம். தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். புரட்சித் தலைவியின், புரட்சித் தலைவரின் பெரும்புகழையும் எந்நாளும் போற்றிடுவோம்.களங்கள் அனைத்திலும் வென்றிடுவோம். கழகத்தை இமயமாய் உயர்த்திடுவோம் என்று உளமார உறுதியேற்போம். வாழ்க அண்ணா புகழ். வளர்க்க எம்ஜிஆரின் பெரும்புகழ். ஓங்குக ஜெயலலிதாவின்  நெடும் புகழ்.வெல்க வெல்க வெல்கவே. அஇஅதிமுக என்றும் வெல்க வெல்க வெல்கவே" என்று கூற தொண்டர்கள் அதை அவரைப் பின் தொடர்ந்து முழங்கினர்.


தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள ஜெ.ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மேடையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது ஜெயலலிதாவை மீண்டும் பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்றும், ஒற்றுமை காப்போம். ஒருங்கிணைவோம். திமுகவின் மக்கள் விரோதச் செயலை மக்களிடம் சொல்வோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே களப்பணிகள் தொடங்குவோம். சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  பின்னர் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்றார்.



அதில், "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம்.  ஜெ.ஜெயலலிதா நடைமுறைப்படுத்திய திட்டங்களை முடக்க நினைக்கும் திமுகவின் செயலை தடுத்திடுவோம். தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கவும், உரிமைகள் மீட்டு எடுக்கவும், ஜெயலலிதாவை இதயத்தில் தாங்கிய ஜனநாயக போர் வீரர்களாக செயல்படுவோம் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்" என்று டிடிவி தினகரன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.அவரைப் பின் தொடர்ந்துஅஞ்சலி செலுத்திய பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிக்கலா நடராஜன்  

"தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். என்றார் ஜெ. ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கி மலர் வளையம் வைத்து தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்தினார். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர், புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் முன் வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...