கொலிஜியம் அமைப்புக் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெளிப்படையா க பேசி வருவது அநாகரீகமானதென பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் தலையிடுவது சரியானதல்லவென கிரிண் ரிஜூஜூ பேசியுள்ளதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி,
பிரதமர் நரேந்திர மோடி அவரது அமைச்சரவையைத் தேர்ந்தெடுப்பது போல கொலிஜியம் செயல்பட வேண்டுமென்று விரும்புகிறாரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவரது டிவிட்டரில், 'கொலிஜியம் நீதிபதிகளை தேர்வு செய்யும் விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் தலையிடக்கூடாது. நீதிபதிகளின் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது சில நேரங்களில் மறுக்கலாம். ஆனால் இது குறித்து அமைச்சர் கூறியிருக்கும் கருத்து அநாகரீகமானது. கொலிஜியத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள் அவர்களுக்கு தெரியாதவர்களைத் தேர்வு செய்வதில்லை என்று அமைச்சர் கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவரது அமைச்சரவையைச் தேர்ந்தெடுப்பது போல கொலிஜியம் செயல்பட வேண்டுமென்று அவர் விரும்புகிறாரா?' எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,
இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்தை கொலிஜியம் தான் மேற்கொள்கிறது. உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியத்திலுள்ள நீதிபதிகள் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த முறைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கொலிஜியம் பரிந்துரைத்த பட்டியலிலிருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைபஹ பெற்று புதிய நீதிபதிகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் இறுதி செய்தனுப்பும். ஆனால், மத்திய அரசு தன்னிச்சையாக நீதிபதிகளை தேர்வு செய்ய முடியாது. இது இந்த கொலிஜியம் அமைப்பை எதிர்ப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவதன் வெளிப்பாடாகதான் சில நாட்களாக சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவின் பேச்சும் அமைந்திருக்கிறது. கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுபஹ பேசியவர், '1993 ஆம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் படி நடைபெற்றது. அக்காலங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளைக் கொண்டிருந்தது. இதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதாவது குடியரசுத் தலைவர் தான் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பது தான் அது. கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனத்தை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதே போல தங்கள் சகோதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில் தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவது தான் பிரதான பணி' என்று அவர் கூறியிருந்தார்.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சில நாட்களுக்கு முன் 'நீதித்துறை சீர்திருத்தம்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், 'தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாகவும், நன்கு பரிட்சையமான நீதிபதிகளை பதவி உயர்வுக்காகவும் கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள் பரிந்துரைக்கின்றனர். இது மிகவும் தவறான விஷயமாகும். தங்களுக்கு தெரியாதவர்களை அவர்கள் பரிந்துரை செய்வதில்லை. என்னுடைய விமர்சனம் என்பது நீதித்துறை மீதோ அல்லது நீதிபதிகள் மீதோ கிடையாது, நான் தற்போது நடைமுறையில் இருக்கும் கொலிஜியம் அமைப்பைத் தான் விமர்சிக்கிறேன்' என்று அமைச்சர் பேசியிருந்தார். இந்தப் பின்னணியில் தான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. கொலிஜியம் அமைப்பு முறை குறித்து 2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு மாற்றாக 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை' கொண்டு வந்தது. ஆனால் இந்த ஆணையத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்துவிட்டது என்பது இங்கு பார்கவேண்டும்.
கருத்துகள்