கிராமப் பகுதிகளில் குடிநீ்ர் விநியோகம்
தெலங்கானா, ஹரியானா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், டாமன் - டையூ, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் அனைத்து கிராமப்புற வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 19 கோடியே 36 லட்சம் கிராமப்புற வீடுகளில், 13.12.2022 வரை 10 கோடியே 71 லட்சம் வீடுகளில் அதாவது 55 சதவீத வீடுகளில் குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல், கிராமப் பஞ்சாயத்துக்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள்