சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் தடுப்பு அண்மைச் செய்தி.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.08 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.13 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.39 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் 99,231 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 3,552 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.01 சதவீதமாகும்.
தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.8 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 182 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,43,665 பேர்.
கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.11 சதவீதம் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.17 சதவீதம்
இதுவரை மொத்தம் 91.04 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,36,919 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்.
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்றய தினம் கொரோனா உறுதியான நிலையில், அவர்கள் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
கொரோனா பாதித்த தாய், மகளுடன் பயணித்த நபர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறது. பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசும் காவல் துறையும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் படி டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடக் கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் குதூகலமான கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.
வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவுகளின் தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள் சுற்றக்கூடாது. குடகாரர்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாதென தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கருத்துகள்