வேந்தன்பட்டியில் இருவர் படுகொலை; உடைக்கப்பட்ட சிசிடிவி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் வேந்தன்பட்டி சிகப்பி (வயது75). அவரது மகன் பழனியப்பன் (வயது55).
கட்டிடப் பொறியாளரானவர் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்தார். அவரது மனைவி உஷா, ஈரோட்டில் ஆசிரியராகப் பணி செய்கிறார்.
அவரது பிறந்தநாளையொட்டி பழனியப்பன், தாய் மற்றும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து பொன்னமராவதியில் அவருடைய மரப்பட்டரையில் வைத்து விழா கொண்டாடியுள்ளார்.பின்னர் நேற்றுமுன்தினம் அவர் தாயாருக்குச் சாப்பாடு கொடுப்பதற்காக வேநதன்பட்டியில் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
பின்னர் வீட்டிற்குளிருந்த இருவரும் காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இந்த நிலையில், வழக்கம் போல் கட்டிட வேலைக்குச் செல்வதற்காக பழனியப்பனைப் பார்க்க வந்த தொழிலாளர்கள் வீட்டின் கதவைத் தட்டிய நிலையில். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால், சந்தேகமடைந்த தொழிலாளர்கள் வீட்டின் பின்புறம் சென்று ஜன்னல் வழியாகப் பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி இருவரும், ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தனர்.
இது குறித்து, பொன்னமராவதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற் போலீஸார், அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் இருந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவின் ஒயர்கள் அனைத்தும் அறுக்கப்பட்டுக் கிடந்தன. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்த நிலையில்தான், நகை, பணத்திற்காக தாய் மகன் இருவரும் கொலை செய்யப்பட்டனரா, இல்லை முன்விரோதமோ அல்லது தொழில் போட்டியோ காரணமாகக் கொலை செய்யப்பட்டனாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்.
தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பொன்னமராவதி சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கருத்துகள்