திட்டங்கள் கண்காணிப்புக்காக இஸ்ரோவுடன் ஒருங்கிணைப்பு
மத்திய அரசின் விண்வெளித் துறையைச் சேர்ந்த வடகிழக்கு விண்வெளிப் பயன்பாட்டு மையத்துடன் இணைந்து வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அக்மைச்சகம் திட்டங்கள் கண்காணிப்புக்கான செல்பேசி செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் செல்பேசி செயலிகள், செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன் படங்கள் என்ற மூன்று வழிகளில் திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்படுகிறது
2022, நவம்பர் வரை வடகிழக்குப் பிராந்தியம் முழுவதும் பல்வேறுபட்ட 1664 இடங்களில் அடையாளம் காணப்பட்ட 588 திட்டங்களில் 562 திட்டங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் செல்பேசி செயலிகள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
கருத்துகள்