ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன உச்சநீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகளின் சார்பில் சிறப்பாக வாதம்
ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன.
எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ள நிலையில் இவ் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. நீதிபதிகள் கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு தினமும் வழக்கை விசாரிக்கிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை முன்வைத்தார். அதில் "தமிழகத்தின் கலாசார விவகாரத்தில் எப்படித் தலையிட முடியும்", என வினா எழுப்பிய நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த 2014 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில்,
தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றி 2017 ஆம் ஆண்டு முதல் போட்டி நடத்தி வருகிறது. என்றார் மேலும் விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான ராகேஷ் திரிவேதி வாதாடும் போது, விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய நாடாளுமன்றம் , மற்றும் சட்டமன்றப் பேரவைக்கு அதிகாரமுண்டு. குறிப்பாக விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் இயற்ற சட்டசபைக்கு முழுமையான அதிகாரமுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் பிரத்யேகமான கலாசாரத்தைக் கொண்டுள்ளது.சிலர் , சைவ உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது சிலரின் கலாச்சாரமாக உள்ளது. இதனால், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இறைச்சி சாப்பிடும் அசைவப் பிரியர்களை தடுத்து நிறுத்த முடியுமா?விலங்குகள் பலியிடுவது என்பது மதத்தின் ஒரு அங்கமாகவே கூட இருக்கிறது. தற்போதைய சூழலில் விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஜல்லிக்கட்டு, என்பது ஜாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டது. இவ்வாறு அவர் வாதிட்டார்.தொடர்ந்து மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடும் போது, தமிழகத்தின் கலாசாரம் தொடர்பான விவகாரத்தில் எப்படித் தலையிட முடியும்? மாவட்ட ஆட்சித் தலைவர் குழு ஆய்வுக்கு பிறகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்க முடியும். ஜல்லிக்கட்டுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கியது சட்டப்பூர்வமானது. மாநில அரசுகளின் முடிவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இவ்வாறு அவர் வாதிட்டார். தமிழர்களின் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஓர் இயங்கியல் பண்பாடே.
"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." தமிழ் நாட்டின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாட்டு அமைப்புக்கு என்ன தெரியும் என உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்ளிட்ட மிருக விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக அயல் நாட்டு அமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஆறாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘ஜல்லிக்கட்டு என்பது எங்களது அடிப்படை உரிமை, கலாச்சாரமாகும்.
இதுகுறித்து முடிவெடுக்க நீதிமன்றம் ஒன்றும் நடுவர் கிடையாது. இதில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உயிரிழப்பு ஏற்படுகிறதென மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. சாலையில் நாம் சென்று கொண்டிருக்கும் போது கூட தான் திடீரென மரணம் ஏற்படுகிறது. அதற்காக செல்லாமல் இருக்க முடியுமா. இருப்பினும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்பதற்காகத் தான் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன்பு காளைகளுக்கு பல்வேறு சோதனைகள் நடத்துகிறீர்கள்?. அப்படியெனில் விளையாட்டு முடிந்தும் பரிசோதனை செய்யப்படுமா என கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி, கண்டிப்பாக நடத்துகிறோம். இதனை நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். அதையடுத்து ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஏதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து,‘‘ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டல்ல அது திருவிழா. அது கோவிலோடு தொடர்புடையதாகும். காளை என்பது எங்களது குடும்ப உறுப்பினர். அவ்வாறிருக்க எப்படி ஒரு குடும்ப உறுப்பினரை நாங்கள் துன்புறுத்துவோம்?. ஜல்லிக்கட்டுக்கு இரு நாட்களுக்கு முன் ஊரே கோவிலில் கூடி காளைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்வோம். மேலும் அந்தக் காளைகளை தெய்வமாக பாவித்து வணங்குகிறோம்.
எனவே, இது கலாச்சாரம், பண்பாடு, மதம் என அனைத்தையும் ஒன்றிணைந்த பொதுத்திருவிழா தான் ஜல்லிக்கட்டாகும். இதில் ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டனில் இருந்து இயங்கம் வெளிநாட்டு அமைப்புக்கு என்ன தெரியும். மேலும் நமது உணர்வு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை அவர்களுக்கு எப்படிப் புரியும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக நமது கலாச்சார விளையாட்டை சட்டமாக்கிய பின்னர் அதை இந்த வெளிநாட்டு அமைப்பு எவ்வாறு ஆட்சேபிக்க முடியும் என காரசார வாதங்களை முன்வைத்தார். ஆனால் மேற்கண்ட வாதங்களுக்கு பீட்டா அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் எதிர்ப்புத் தெரிவித்தார். அதையடுத்து விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. அது நமது ஜல்லிக்கட்டு விவகாரங்களில் மத்திய மாநில அரசுகள் வாதம் நல்ல தீர்ப்பை பெற்றுத்தரும் என்பதாகும் அயல் நாட்டு அமைப்புகள் நமது கலாச்சாரம் பண்பாடுகளில் தலையிட உரிமைகள் உண்டா என்பதே இப்போது உள்ள எழு வினா அதற்கு உச்சநீதிமன்றம் நலால தீர்வு வழங்கும் என ஏதிர்பார்க்கலாம்.
கருத்துகள்