அமைப்புசாரா மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தற்சார்பு இந்தியா நிதி தொகுப்பு மூலம் ரூ.27 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது
அமைப்புசாரா மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தற்சார்பு இந்தியா நிதி தொகுப்பு மூலம் ரூ.27 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
பிரதமரின் வேலை உருவாக்கத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பண்டிட் தீன்தயாள் கிராம இளைஞர்கள் வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், தற்சார்பு வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இத்தகவலை மாநிலங்களவையில் இன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி எழுத்துபூர்வமாக அளித்தார்.
கருத்துகள்