முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர்ஜாதி ஏழைகளுக்கு பத்து சதவீதம் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல்

உயர்ஜாதியினர் உட்பட பொருளாதார ரீதியான ஏழைகளுக்கு கல்வி உள்ளிட்ட அரசு வேலைகள் மற்றும் நிறுவனங்களில் 10 சதவீதம்  தாக்கல் செய்துள்ளது.

அதே போல் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுமென்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இந்த சட்டத்த் திருத்தத்தைக் கொண்டு வந்ததை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


அந்த வழக்கில் தான் இந்தத் தீர்ப்பு அப்போது  வெளியானது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனவும் நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாதென்றும் தீர்ப்பளித்ததன் மூலம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103 ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 10% இட ஒதுக்கீடு என்பது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிரானதென்ற கடுமையான வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்த வேண்டும் எனவும்  பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதியின் அறையில் வைத்து நடைபெறும். ஆனால் அப்படி நடக்கக்கூடாதென்ற முக்கியமான கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளது தனது மனுவில்  இந்த சட்டத்தினால் 133 கோடி இந்திய குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்கும் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறதென்றும்.  முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்பது, சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறதென திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது.

சமூகத்தில் முன்னேறிய ஜாதியினர் உட்பட பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS) என்பது 133 கோடி இந்தியர்களைப் பாதிக்கிறதென்பதால் அந்த அடிப்படையில் மறுஆய்வு மனு மீதான விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்துமாறும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்ததில்

இந்தியாவின் மக்கள்தொகையை இடஒதுக்கீடு நோக்கங்களுக்காக பரஸ்பர பிரத்தியேகப் பிரிவுகளாகப் பிரிப்பதைத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது, இது சகோதரத்துவத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கையை அடிப்படையில் சிதைக்கிறதென்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் பணி செய்யும் ஊழியர்கள் குறித்த தகவலில்மத்திய அரசுப் பணியில் 27 சதவீதம்  இடஒதுக்கீடு இருந்தும் ஓபிசி-யில் 20 சதவீதம்  ஏன்?..என்ற வினா வருகிறது  பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆண்டறிக்கையில் உள்ள தகவல் படி 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடிருந்தும் அவர்கள் மத்திய  அரசுப் பணியில் 20 சதவீதம் என்ற அளவிற்கே பணியிலுள்ளதாக மத்திய அரசின் பணியாளர்கள் துறை அமைச்சக ஆய்வறிக்கையின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, மத்தியரசின் 55 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 20.43 சதவீதம் மட்டுமே.

ஆனால் அவர்களுக்கு அரசியலமைப்பின் இடஒதுக்கீட்டின் படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை விடக் குறைவேயாகும், எஸ்சி - எஸ்டி வகுப்பினரை பொறுத்தவரை, மத்தியரசுப் பணியில் 15 சதவீத இடஒதுக்கீடு பெறுகின்றனர். தற்போது 17.39 சதவீத பணியாளர்கள் பணியிலுள்ளனர். அதேபோல் 7.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பழங்குடியினர் 7.64 சதவீதம் பேர் பணியிலுள்ளனர். இந்தப் புள்ளி விபரங்களில் ஓபிசி பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் காட்டிலும் அவர்களின் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமலும், காலியாகவும் உள்ளன.

ஓபிசி பிரிவினர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒன்றிய அரசு அவ்வப்போது அறிவிப்பாணைகளை வெளியிட்டாலும் கூட, அரசுப் பணியில் சேருவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அவர்கள் இடஒதுக்கீட்டின் முழு பலனையும் பெறவில்லையென்றும் கூறப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் இதற்கு காரணமாக இருக்கலாமென்றும், அதனால் முப்பதாண்டுகளாக ஓபிசி பிரிவில் பணியாளர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்தியரசின் பணியாளர்கள் விபரத்தில், பழங்குடியின வகுப்பினர் - 3,95,712 பேர், ஓபிசி வகுப்பினர் - 1,47,953 பேர், அட்டவணைப்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3,36,927 பேர், பொது மற்றும் இதர பிரிவினர் - 10,56,504 பேர் என, மொத்தம் 19,37,096 பேர் மத்தியரசுப் பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...