சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்காக செயல்படுத்தப்படும் 15 அம்சத் திட்டங்கள்
சிறுபான்மையினர் நலனுக்கான பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் நல அமைச்சகம் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருவதாக மத்திய சிறுபான்மையினர் அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அவர் மாநில வாரியாக 2014-15 முதல் 2021-22 வரை ஒதுக்கப்பட்டக் கல்வி உதவித்தொகைப் பட்டியலை வெளியிட்டார்.
சிறுபான்மையினர் உட்பட பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமுகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் சிறுபான்மையினர் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை பன்னோக்கு உத்திகளைப் பயன்படுத்தி இத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இஸ்லாமியர், சீக்கியர், கிறித்தவர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், ஜெயினர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்காக 15 அம்சத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் 2014-15 முதல் 2021-22 வரை மொத்தம் ரூ. 28,536.78 கோடி அளவுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்து. தமிழகத்தில் ரூ. 1,501.92 கோடியும் புதுச்சேரியில் 13.97 கோடியும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்