மத்திய கனரகத் தொழில் அமைச்சகத்தின் ஃபேம் இந்தியா இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் 50 மின்சாரப் பேருந்துகள் தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டன
மத்திய கனரகத் தொழில் அமைச்சகத்தின் ஃபேம் இந்தியா இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், நகரங்கள்/மாநில அரசுகள் 3,538 மின்சாரப் பேருந்துகளுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளன என்று மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார். அந்த 3,538 மின்சாரப் பேருந்துகளில், இதுவரை மொத்தம் 1,716 மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தில்லி யூனியன் பிரதேசத்திற்கு 400 மின்சாரப் பேருந்துகள்; தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கு (டிடிசி) 300 மின்சாரப் பேருந்துகளும், நகரங்களுக்குள் செயல்படும் வகையில், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு (டிஎம்ஆர்சி) 100 மின்சாரப் பேருந்துகளும் ஆகஸ்ட் 2019-ல் அனுமதியளிக்கப்பட்டன.
மொத்தம் 250 பேருந்துகள் ஏற்கனவே டிடிசியால் பயன்படுத்தப்பட்டுவிட்டன, இப்போது மீதமுள்ள 50 பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளன, டிடிசி க்கு 300 மின்சாரப் பேருந்துகளை வழங்கும் உறுதிமொழியை கனரகத் தொழில் அமைச்சகம் நிறைவேற்றுகிறது. டிடிசிக்கு வழங்கப்பட்டுள்ள 300 மின்சாரப் பேருந்துகளுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகையாக ரூ. 165 கோடி அளிக்கிறது.
கருத்துகள்