முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிநபர் வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட ஈ.வே.ரா. பெரியாரின் சிலை அகற்றிய இரண்டு அதிகாரிகள் பணி மாற்றம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  புதிதாகக் கட்டப்பட்ட தனிநபர்  வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட


ஈ.வே.ரா. பெரியாரின் சிலை அகற்றிய வட்டாச்சியர்,காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணி மாற்றம். 

திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர் கட்டிய புதிய வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட ஈ.வே.ரா. பெரியாரின் மார்பளவு சிலையை வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் அகற்றியதால் பரபரப்பானது





அதனைக் கண்டித்து அந்த இடத்திலேயே பெரியாரியவாதிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  இளங்கோவன். திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிகிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயல்படுகிறார்.இவர் காரைக்குடி வட்டம்  கோட்டையூர் உதயம் நகரில் சொந்தமாகபுதிய வீடு கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குஉள்ளே ஈ.வே.ரா. பெரியாரின் மார்பளவு பைபர் சிலையும் வைத்துள்ளார்

.பாஜகவில்  தலைவர்களில் ஒருவரான  எச்.ராஜாவின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இவரது வீடு அமைந்துள்ள நிலையில் ஈ.வே.ரா.பெரியார் சிலையின் திறப்பு விழா காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இந்தச் சிலையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டநிலையில் இந்தச் சிலையை திறக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  நேற்று அனுமதி மறுத்ததால் பரபரப்பானது.





நேற்று இளங்கோவனின் வீட்டிற்குச் சென்ற காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சிலையை அகற்றும் படி  சொன்னதற்கு இளங்கோவன் மற்றும் பலர்  கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், எதிர்ப்பையும் மீறி காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் , பெரியார் சிலை மீது துணியைச் சுற்றி வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியதால்  பரபரப்பு ஏற்பட்டதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக அந்த அமைப்பினர்  முழக்கங்களை எழுப்பினர். அது குறித்து

திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த அரசு எழிலன் கூறுகையில் :- அரசு அனுமதி பெற்ற சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கிய இரண்டு  நீதிமன்றத் தீர்ப்புகளைக் காட்டிய பிறகும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதை அகற்றினர் என்று தெரிவித்துள்ளார்.

அது குறித்து அந்த வீட்டின் உரிமையாளரான இளங்கோவன்  கூறியதாவது,:-  பெரியாரின் மார்பளவு பைபர் சிலையை என்னுடைய சொந்த பட்டா இடத்தில் மதில் சுவருக்கு உள்ளே நான் வைத்தேன். காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் ஒரு கட்சியைச் சேர்ந்த யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சிலையை அகற்றியுள்ளார்கள்.காரைக்குடியில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் வீட்டிற்கும் எனது வீட்டிற்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும். நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக இருப்பதாக நாங்கள் காவல்துறையிடம் கூறினோம். சிலையை அகற்றக்கூடாது, அப்படி அகற்றினால் சட்ட விரோதம் என்று சொன்னோம். மீறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தோம்.சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நான் படித்துக் காட்டியும் அவர்கள் ஏற்க மறுத்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவேன் என்று சொன்ன போது நீங்க நீதிமன்றம் போங்க என்று கூறினார். இந்த சிலையை வைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வரும் என்கிறார்கள். யார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம் போய் பேசச் சொன்னோம். காவல்துறையில் காவிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது வெறும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பெரியார் மீதான காழ்புணர்ச்சியால் அதிகாரிகள் இப்படி நடக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பெரியாருக்கு சிலை வைப்பதில் இவ்வளவு மோசமாக நடந்துகொள்வார்கள் என்று நினைக்கவில்லை. ஏதோ பாஜக ஆட்சி நடப்பதைப் போல் தெரிகிறது" எனத் தெரிவித்த நிலையில்  ஈ.வே.ரா.பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா.கண்ணன், தேவக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்  கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்            

 வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டுக்கு தமிழ் இல்லம் என்று பெயர் வைத்துள்ளார், சொந்தமான வீடு கட்டி. அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே ,ஈ.வே.ரா பெரியாரின் மார்பளவு பைபர் சிலையையும் அமைத்துள்ளார்..

இன்று காலை காரைக்குடி வந்த திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி அந்த வீட்டில், 'இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்ட விரோதமாக வருவாய்த்துறை காவல்துறை அகற்றியது' என்று எழுதப்பட்ட பேனரை திறந்து வைத்தார். இந்த இடத்தில் மீண்டும் பெரியார் சிலையை நிறுவுவோம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

 இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, 'காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்து கொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிடை Doesn't செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.காரைக்குடியில் தனியார் வீட்டுவளாகத்தில் நிறுவப்பட்ட 

பெரியார் சிலையை அகற்ற உத்தரவிட்ட வட்டாட்சியரும் காவல்துறை ஆய்வாளரும் பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்

அவர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் உரிமை மீறலுக்கும் இது மட்டும் தண்டனையாகாது 

முறையாக விசாரித்து அவர்களை குறைந்தபட்சம் பணியிடை நீக்கம் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியிலிருந்தே எழுகிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...