முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனி கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அறநிலையத் துறையின் கட்டுப்பாடுகள் பக்தர்கள் அதிர்ச்சி

மேற்குத் தொடர்ச்சி மலையில் தனியே அமைந்த  பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவர் போகரால்  நவபாசாணத்தால் செய்த புகழ் பெற்ற முருகன் சிலை, மலைக்கோயிலில் உள்ளது. 


அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் இங்கு உள்ளது.இதன் சங்ககாலப் பெயர் பொதினி. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” எனக் குறிப்பிடுகிறார். அதில் வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது  பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோவிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு போகர் உருவாக்கியது  பழனி மலைக்கோவில்.

வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு என்றனர் வரலாற்றில்.மூன்றாம் படைவீடு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்   கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொள்ள இணையதள முன்பதிவு தொடங்கியுள்ளது. அதன் பின்னர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு மட்டுமே ஜனவரி மாதம் 22 ஆம் தேதி உறுதி செய்யும் தகவல் மின்னஞ்சல் வழியாகவும், மற்றும் செல்லுலர் தொலைபேசி வாயிலாக   குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும் எனவும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 


பழனி கோவில் கும்பாபிஷேகம். வாய்ப்பு  இருந்தால் மட்டுமே முருகனைத் தரிசிக்கலாம். குலுக்கல் மூலம் டிக்கெட் உறுதியாகும்.


தற்போது  இணையதள முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 


தமிழ்நாட்டில் அதிகமாக பக்தர்கள் வரும் இக்கோவிலில்  2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு பழநி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடத்தப்படவில்லை.பல தரப்பினரும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து  2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் நடைபெற்றது. ஆனால், கொரோனா தொற்று பரவல்  உள்ளிட்ட பல காரணங்களால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.



 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கும்பாபிஷேகத் திருப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தமிழ்நாடு முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியதையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் பழநி கோவிலை ஆய்வு செய்து கும்பாபிஷேகப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. ரூபாய்.16 கோடி செலவில் கட்டுமானம் மற்றும் அழகுபடுத்துதல் பணி நடைபெற்று முடிந்துள்ளது.  கும்பாபிஷேகத்திற்காக, 2022 டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. அர்ச்சகர்களின் புகார்களுக்கு மத்தியில் கும்பாபிஷேகப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.




ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்,  கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள www.palanimurugan.hrce.gov.in மற்றும் www.hrce.tn.gov.in ஆகிய இணையதளத்தில் 18. ஆம் தேதி நேற்று முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம் எனவும் அதற்கு ஆதார் அட்டை, வருமான வரி அட்டை,கடவுச்சீட்டு , பொது வினியோகத் திடட குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் செல்லுலர் தொலைபேசி  எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை அளித்து முன்பதிவு செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.




ஜனவரி 21ஆம் தேதி குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் மின்னஞ்சல் வழியாகவும், செல்லுலர் தொலைபேசி  குறுந்தகவல் மூலமும் அனுப்பி வைக்கப்படும். இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவர்கள் வருகிற ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் பழனி ரயில்வே பீடர் சாலையில்  உள்ள வேலவன் விடுதியில் பதிவேற்றம் செய்ய சான்றிதழ் நகலுடன் வந்து கட்டணமில்லா சீட்டை பெற்றுக் கொள்ளலாம் எனவும்.




மேற்கண்ட 2 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கட்டணமில்லா சீட்டு பெற முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு வருவோருக்கு சீட்டு வழங்க இயலாது. இந்தச் சீட்டை கொண்டு படிப்பாதை வழியே மட்டுமே மலைக்கோவிலுக்கு செல்லலாம். ரோப்கார், மின் இழுவை ரயில் போன்ற சேவைகளுக்கு இது பொருந்தாது என அறநிலையத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 23 ஆம் தேதி முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கும். ஜனவரி மாதம்  26 ஆம் தேதி காலை 9.50 மணி முதல் 11 மணி வரை பாதவிநாயகர் முதல் இரட்டை விநாயகர் வரை உள்ள பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





அதாவது 17 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி  கோவிலில் நடைபெறப்போகும் கும்பாபிஷேகத்தை பார்க்க பக்தர்கள் ஆவலாக உள்ள நிலையில்




ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அருள் கிடைக்கும் என்ற நிலையை இந்துசமய அறநிலையத் துறை உருவாக்கியுள்ளது பக்தர்களுக்கு கவலை  ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...