முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வதேச சொகுசு கப்பல்கள் சென்னை மற்றும் தூத்துக்குடிக்கு வருகை

சர்வதேச சொகுசு கப்பல் எம். எஸ். அமிரா தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வருகை

எம். எஸ். அமிரா (M.S. Amera) என்ற சர்வதேச சொகுசு கப்பல் சுமார் 698 பயணிகள், 386 கப்பல் பணியாளர்களுடன் இன்று (11 ஜனவரி) முதன் முறையாக தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த பயணிகள் கப்பலானது நைஸ் பிரான்ஸ் (Nice- France) நாட்டில் இருந்து 22.12.2022 அன்று புறப்பட்டு மால்டா - எகிப்து - ஓமன் நாடுகள் மார்க்கமாக பயணத்தை மேற்கொண்டு மும்பை துறைமுகத்தை 08.01.2023 அன்று வந்தடைந்தது. மேலும் கொச்சி துறைமுகத்திற்கு 10.01.2023 வந்தடைந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை இன்று வந்தடைந்தது.


கப்பல் பயணிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் பயணிகள் துறைமுக வருகை மறக்க முடியாத அனுபவமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் துறைமுக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன.

வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் திரு தா. கி. ராமச்சந்திரன், இ.ஆ, ப. கப்பலின் கேப்டன் கியூபர்ட் வோலோவை நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார். அப்போது, தென்தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்திருப்பதை கருத்தில் கொண்டு, இது போன்ற பயணிகள் கப்பல் வருவதினால் வருங்காலங்களில் பல்வேறு பயணிகள் கப்பல் இயக்குபவர்களுடன் துறைமுகம் இணைந்து தூத்துக்குடிக்கு பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்


இந்த  பயணிகள் கப்பலானது 204 மீட்டர் நீளமும், அதிகபட்சம் 44.8 மீட்டர் காற்று வரைவு, 13 அடுக்குகள் மற்றும் 413 தங்கும் அறைகளுடன், 835 பயணிகளைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இக்கப்பல் அதிகபட்சமாக 20.5 நாட்ஸ் (Knots) (38 ஒருமணி நேரத்திற்கு ) வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கப்பலில் 3 உணவங்கள், ஓய்வறைகள், நூலகங்கள், விளையாட்டு மற்றும் நீச்சல் குளங்கள் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.

மீண்டும் இப்பயணிகள் கப்பலானது இன்று மாலை 7 மணியளவில் கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தை துவங்கி வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஜெர்மனி நாட்டை வந்தடைய உள்ளது.

இந்த நிகழ்வில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணைத் தலைவர் திரு. பிமல்குமார் ஜா, கடல்துறைமுக குடியேற்ற மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு. எம். ராதாகிருஷ்ணன். இ.கா.ப., சுங்கத்துறை இணை ஆணையர் திரு டி.சித்தார்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இத்தகவலை வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும்     சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சொகுசு கப்பல்

எம் வி லே சாம்ப்லேய்ன் என்ற பயணிகள் சொகுசுக் கப்பல் இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 108 பயணிகள் மற்றும் 118 குழுவினருடன் சென்னை துறைமுகத்திற்கு நேற்று (ஜனவரி 10) வந்தடைந்தது.  கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சென்னை துறைமுகம் வந்தடையும் முதல் சர்வதேச பயணிகள் கப்பல் இதுவாகும்.

இந்த கப்பலின் பயணிகள் சென்னையில் உள்ள புனித  ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம், கபாலீஸ்வரர் கோயில் மற்றும் தக்ஷின் சித்ரா போன்ற இடங்களை காண திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா சேவை வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை துறைமுக ஆணையத் தலைவர் திரு சுனில் பலிவால் இ.ஆ.ப சென்னை துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும், இந்தியாவில் சர்வதேச கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இத்துறைமுகத்தின் பங்கினை குறித்தும் தெரிவித்தார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள், கப்பல் முகவர் நிறுவனங்கள் ஆகியவற்றின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். கொரோனாவுக்கு பிறகான காலக்கட்டத்தில் இதுபோன்ற நவீன சொகுசுக் கப்பலை ஈர்க்கும் விதமாக இந்த துறைமுகம் மாற்றம் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த சொகுசு கப்பல் இலங்கைக்கு இன்று (ஜனவரி 11) புறப்படுகிறது. இத்தகவல் சென்னை துறைமுக ஆணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...