குறைதீர்த்தலுக்கு நேரடியாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்கும் புதிய திட்டம் இன்று தொடங்கியது
சென்னையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாஸ்போர்ட் சம்பந்தமான குறைகளுக்கு தீர்வு காண “உங்களின் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை சந்தியுங்கள்” என்ற புதிய திட்டம் இன்று தொடங்கியது.
இதே போன்று ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள எண் 158, ராயலா டவர்ஸ், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் முன்கூட்டியே நேர ஒதுக்கீடு பெறாமல் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியையும் இதர மூத்த அலுவலகர்களையும் சந்தித்து குறைகளுக்கு தீர்வு காணலாம். இந்த சந்திப்புக்கு முன்னதாக பாஸ்போர்ட் தொடர்பாக குடிமக்கள் எதிர்கொள்ளூம் பிரச்சனைகள் பற்றிய விவரங்களை 730533066 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நடைமுறை சந்திப்புக்கு தயாராக அலுவலர்களுக்கு உதவியாக இருக்கும்.
சென்னையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு எஸ் கோவேந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்
கருத்துகள்