விமானப் போக்குவரத்து துறை மக்களை ஒருங்கிணைப்பதுடன் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது: பிரதமர்
கொரோனாப் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 4.45 லட்சத்தை எட்டி சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதேப் போல் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் அவர் பாராட்டியுள்ளார்.
மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் வெளியிட்டுள்ள பதில் பதிவில் கூறியிருப்பதாவது:
“அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்கள் மற்றும் சிறந்த விமானப் போக்குவரத்து இணைப்பு.. விமானப் போக்குவரத்து துறை மக்களை ஒருங்கிணைப்பதுடன் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது.”
கருத்துகள்