காவிரிக்கரையிலமைந்த திருச்சிராப்பள்ளி
சங்க காலத்திலும், முற்காலச் சோழர்களின் காலத்திலும் தலைநகரம், இராமசாமியை ராமனென அழைப்பது போல தற்போது திருச்சி எனச் சுருக்கியழைக்கிறார்கள்..
திருச்சிராப்பள்ளி என்பது , திரு சிராய் பள்ளி, அதாவது சிராய் (சிராய்- பாறை ) மலைக் கோட்டை அது சார்ந்த பல திருக்கோவில்கள், தென்னூர்,
சுமார் 450 ஆண்டுகள் கடந்த வரலாறு உண்டு (1690-1710) க்கு முன் விஜநகர நாயக்க மன்னர் திருச்சிராப்பள்ளி உறையூரை தலைமையாக்கி ஆண்ட விசுவப்ப நாயக்கர் (மதுரை இராணி மங்கம்மாளின் உடன் பிறந்தவர்) மந்திரியான பிரதாணி தளவாய். அரிய நாத முதலியார் ஆலோசணையில் சிறப்பாக ஆட்சி செய்த போது மன்னரின் மகள் இறந்து போக விரக்தியில், மன்னரால் ஆட்சியில் கவனம் செலுத்த வில்லை.,
உறையூர் தென்னூர் பகுதியில் அவரது மகளைப் போலுள்ள பெரியநாச்சியை வளர்த்து மகளாக சுவீகரித்தார், ஆனால், கணவர் இறந்த போது பெரியநாச்சியோ, உடன்கட்டை ஏறி உயிர்நீத்து உறைந்த இடமே உறையூர் பெரியநாச்சி உடன்கட்டை ஏறிய சூரியோதய நேரத்தில் சந்தனக் கட்டை முதலான அனைத்து விதமான உயர் ரக மரங்களை வைத்து சிதை மூட்டி, தனது கணவர் வீரிய பெருமாளை கையிலேந்தி சிதையில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.
பின்னர், நமது பெரியநாச்சி, மன்னரின் கனவில் தோன்றிய நிலையில் அது அப்பகுதியில் இரண்டு கோவிலானது வரலாறு. "தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10-
என்ற பெரிய திருமொழி வைணவ நெறி ஆழ்வார் பாசுரம் காட்டும் .அவர்கள் காலம் தொட்டு அமைந்த ஸ்தலமாக திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை சாலையிலுள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி மாலை வாஸ்து
பூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகளுடன் யாகசாலைப் பூஜைக்கான விழா தொடங்கியது அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் காலம், மூன்றாம் கால நிகழ்வுகள், யாகசாலை பூஜைகள் தொடங்கி பூரண ஆகுதி நடைபெற்றது. பின் நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால நிகழ்வுகள் நடந்தது. காலை 8 மணிக்கு நான்காம் கால மகா பூர்ணாஹுதி நடைபெற்று . காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித நீர் திருக்குடங்கள் புறப்பட்டன. 9.30 மணிக்கு
விமான சம்பிரோக்ஷணமும்
. காலை 9.45 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு மகா சம்ரோக்ஷணமும் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு பஞ்ச தரிசனம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை ஸ்ரீ பாஞ்சாராத்திரி ஆகம முறைப்படி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெள்ளரை பெரிய கோவில் மிராஸ் அர்ச்சகரான கோபாலகிருஷ்ணப் பட்டர் சர்வ சாதகராக இருந்து வேதாகம முறையில் குடமுழுக்கை நடத்தி வைத்தார். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி தில்லை நகர் திருவாளர் ஏ.ஆர். அண்ணாமலை செட்டியார் குடும்பத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மாலை 6 மணிக்கு மேல் சுவாமிகள் புறப்பாடு திருவீதியுலா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா மற்றும் பூஜைகளில் திருச்சிராப்பள்ளி சுற்றுவட்டாத்திலுள்ள திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலயத்தில் தரிசித்தனர்.
கருத்துகள்