மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேயில், “ஷிவ் சிருஷ்டி” என்ற சிவாஜி மஹராஜின் வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கிய பூங்காவை இன்று திறந்துவைத்தார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேயில், “ஷிவ் சிருஷ்டி” என்ற சிவாஜி மஹராஜின் வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கிய பூங்காவின் முதல் கட்டத்தை இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, சுதந்திரப் போராட்டத்தில், சிவாஜி மஹராஜின் உன்னதப் பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார்.
இன்றைய நாள், சிவாஜியின் வாழ்க்கையால் கவரப்பட்ட, உலகம் முழுவதும் வாழும் அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது என்றார்.
சிவாஜியின் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்தே பிரதமர் திரு நரேந்திரமோடி, நாடு முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் ஆன்மிகத் தலங்களை புனரமைத்து வருவதாகக் கூறினார்.
தொழில் நுட்பம் மற்றும் வரலாற்றை உள்ளடக்கிய வியப்பிற்குரிய கலவையாக, இந்த ஷிவ் சிருஷ்டி பூங்காத் திகழ்வதாகக் பெருமிதம் தெரிவித்தார். சுயராஜ்யத்தை நிறுவியதன்மூலம், இந்தியாவை யாராலும் ஒடுக்க முடியாது என்பதையும், மக்களை யாராலும் இழிவுபடுத்த முடியாது என்ற செய்தியையும் சிவாஜி உலகம் முழுவதிற்கும் வழங்கியதையும் மத்திய அமைச்சர் அமித்ஷா நினைவுகூர்ந்தார்.
சிவாஜி மஹராஜின் பிறந்தநாளையொட்டித் திறக்கப்பட்ட இந்த பூங்காவை, நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கடுகிறது
கருத்துகள்