பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பொருளாதாரத்திற்கு வலிமையான அடித்தளம் அமைத்திருப்பதால், அது அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வீழ்ச்சியை தாங்கி நிற்கிறது: மத்திய இணையமைச்சர்
இந்தியப் பொருளாதாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வலிமையான அடித்தளம் அமைத்திருப்பதால், அது, அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வேதச வீழ்ச்சிகளை தாங்கி நிற்பதாக, மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், அணுசக்தி, விண்வெளி அறிவியல் பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் தீர்வு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் எதிர்காலம் சார்ந்த பட்ஜெட் என்றார். கடந்த 2014ம் ஆண்டு முதல் இன்றுவரை மேற்கொண்டுவரும் புரட்சிகரமான மற்றும் ஒளிமறைவில்லாத சீர்திருத்த நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது என்று கூறினார்.
சர்வதேச புத்தாக்க குறியீட்டில், இந்தியா 40வது இடத்திற்கு முன்னேறியிருப்பது, உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதாகக் அமைச்சர் கூறினார். மத்திய அரசின் பட்ஜெட், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பையும் உள்ளடக்கியதாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெரிய தொழில்கள் வரை, பெண்கள் முதல் இளைஞர் வரை, விவசாயிகள் முதல் ஸ்டார்-அப் வரை அனைவருக்குமான பட்ஜெட்டாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த ஜிதேந்திர சிங், ஜார்க்கண்டில் 75 பாதிக்கப்பட்ட பட்டியலின பழங்குடியினர், அடையாளம் காணப்பட்டு, அவர்களின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
740 ஏகலைவா உண்டி உறைவிடப் பள்ளிகளின் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக, 38,800 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதையும் மத்திய இணையமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள்