மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சந்திப்பு
புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, மத்திய தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று மதியம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதேபோல், தமிழ்நாட்டு நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.
கருத்துகள்