இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை - உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று குவாலிட்டி கனெக்ட் மற்றும் மானக் மந்தன் நிகழ்ச்சிகளை நடத்தியது
பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிஐஎஸ் சென்னை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
BIS , சென்னை கிளை அலுவலகம் உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு இன்று இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தியது.
A ) குவாலிட்டி கனெக்ட் : 8 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் 1 நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த மானக் மித்ராக்கள், நுகர்வோரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தர நியமங்கள் மற்றும் தரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும்
நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இன்று காலை சென்னை பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், BIS தென்மண்டலத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விழாவைச கொடியேற்றி துவக்கி வைத்தார். மேலும் கடலூர் சி.கந்தசுவாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவர்களும் . செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்;பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, விழுப்புரம்; பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி; அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஜோலார்பேட்டை; ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர்; அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை; பேட்ரிசியன் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் & சயின்ஸ், சென்னை & நுகர்வோர் அமைப்பு, கடலூர் ஆகியவை BIS சார்பாக தரம் பற்றிய விழிப்புணர்வை மேற்கொள்வர் . இந்த மானக் மித்ராக்கள் BIS செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பொது நுகர்வோருடன் பகிர்ந்து கொள்வார்கள்.
B ) மானக் மந்தன் : இந்திய தர நியமம் 15748:2022/ISO 11612:2015 இன் படி வெப்பம் மற்றும் நெருப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஆடைகளுக்கான -குறைந்தபட்ச செயல்திறன் தேவைகள் “” என்ற தலைப்பில், "மானக் மந்தன்” நிகழ்ச்சி சென்னையில் இன்று 15 மார்ச் 2023 நடைபெற்றது. இந்த தர நியமம் , உற்பத்தியாளர்களால் மிக உயர்ந்த தரத்தை அளிப்பதை உறுதி செய்கிறது மற்றும் சுகாதார அபாயங்களைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதிக அளவிலான பயன்பாட்டிற்காக அணியக்கூடிய பாதுகாப்பு ஆடைகள், ஆடைகள் தேவைப்படும் இடங்களில் ( வரையறுக்கப்பட்ட நெருப்பு பரவல் மற்றும் தொழிலாளர்கள் கதிரியக்க அல்லது வெப்பச்சலனத்திற்கு உள்ளாகும் போது அல்லது வெப்பம் அல்லது உருகிய உலோகத் தெறிப்புகளைத் தொடர்புகொள்ளும் பொது) , தொழிலாளர்களுக்கு உடல்நலக் கேடுகளைக் குறைக்கிறது. நிகழ்வில் 33 பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். திரு எம் வி கார்த்திகேயன், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் (எஃப்ஏசி),தமிழக அரசு நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
திருமதி பவானி , Scientist-E, Director & Head (BIS-Chennai Branch Office) நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார் BIS இன் மற்ற அதிகாரிகள் தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தினர்.
கருத்துகள்