பிரிட்டிஷ் கடற்படை போர்க்கப்பல் எச்எம்எஸ் டமர் சென்னை வருகை
பிரிட்டிஷ் கடற்படையின் போர்க்கப்பலான எச்எம்எஸ் டமர் மார்ச் 17ந்தேதி சென்னைக்கு வந்துள்ளது. வரும் 29ந்தேதி வரை இந்தக் கப்பல் சென்னையில் இருக்கும். சமீபத்தில் பலதரப்பு கடற்படை பயிற்சியான "La Pérouse" இல் இக்கப்பல் பங்கேற்றது.
கப்பலின் கமாண்டர் டெய்லோ எலியட் ஸ்மித், டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் கேப்டன் இயன் லின் ஆகியோர், சென்னையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதியின் கட்டுப்பாட்டு அலுவலர் அட்மிரல் எஸ் வெங்கட் ராமனைச் சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த விசயங்களைப் பற்றி விவாதித்தனர்.
இந்தக் கப்பல் சென்னையில் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கும் இடையே தொழில்முறை மற்றும் சமூக கலந்துரையாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கருத்துகள்