முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி தனிப்படையை சிறைபிடித்து வைத்த இராஜஸ்தான் காவல்துறை

திருச்சிராப்பள்ளி  கருமண்டபத்திலுள்ள ஒரு வீட்டில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் .17 ஆம் தேதி 13 பவுன் நகை, ரூபாய்.17 ஆயிரம் ரொக்கம், ஒரு கை மடிக் கணிப்பொறி உள்ளிட்டவை களவு போனது.


அதை மீட்கச் சென்ற திருச்சிராப்பள்ளி தனிப்படையை சிறைபிடித்து வைத்த இராஜஸ்தான் காவல்துறை பொய்யான இலஞ்சப் புகார் எனத் தெரிந்து விடுவித்தது

இதுதொடர்பாக இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பினய் பகுதி  ரத்தன் (வயது 38), சங்கர் (வயது 25), அவரது சகோதரர் ராம்பிரசாத் (வயது 25), ராமா (வயது 40) ஆகியோரை செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்ததையடுத்து திருட்டு நகைகளை மீட்க திருச்சிராப்பள்ளி கன்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் கென்னடி, ஆய்வாளர்கள் மோகன், ஷியாமளா தேவி, சார்பு ஆய்வாளர் உமா உள்ளிட்ட 15 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் ரத்தன், சங்கரை கூட்டிக் கொண்டு வேனில் இராஜஸ்தான் சென்றனர்.அங்குள்ள அஜ்மீர் மாவட்டத்திலுள்ள உள்ளூர் காவலரின் உதவியுடன், ரத்தன் தெரிவித்த ஒரு நகைக்கடை வியாபாரியைச் சந்தித்த திருச்சிராப்பள்ளி காவல்துறையினர், அவரிடமிருந்து 300 கிராம் தங்கம், ரூபாய்.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த பின், மற்றொரு நகை வியாபாரியான பர்னலாலைத் தேடிச் சென்றபோது, அவர் தப்பிச் சென்றுவிட்டதனால், அவரது மனைவி சானியாவிடம் விசாரித்தனர்.

அப்போது திருச்சிராப்பள்ளி காவல்திறையினரைத் தொடர்பு கொண்ட சானியாவின் சகோதரர் லட்சுமணன், திருட்டு நகைகளை விற்றுவிட்டதாகவும், அதற்குப் பதிலாக ரூபாய்.25 லட்சம் பணம் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார். திருச்சிராப்பபள்ளி காவலர்கள் லட்சுமணன் கூறியபடி, சானியாவை அழைத்துக் கொண்டு வேனில் அஜ்மீர் சென்றனர்.

இதற்கிடையே, திருட்டு வழக்கில் தனது சகோதரியை கைது செய்யாமலிருக்க திருச்சிராப்பள்ளி தனிப்படை காவலர்கள் லஞ்சம் கேட்பதாக அஜ்மீரிலுள்ள இலஞ்ச ஒழிப்புத் துறையில் லட்சுமணன் புகார் செய்துள்ளார். அதை நம்பிய இராஜஸ்தான் விஜிலன்ஸ்  நேற்று முன்தினம் மாலை அஜ்மீரிலிருந்த இன்ஸ்பெக்டர் மோகன், சப் இன்ஸ்பெக்டர் உமா உள்ளிட்ட 12 பேரை சிறைபிடித்து விசாரணைக்குக் கூட்டிச் சென்றனர்.

அதையறிந்த தமிழ்நாடு  டிஜிபி சைலேந்திர பாபு, திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஆணையர் சத்தியப்பிரியா உள்ளிட்டோர் இராஜஸ்தான் காவல் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு சம்பவங்களை விளக்கினர். அதையடுத்து, தமிழ் நாடு தனிப்படைக் காவலர்களை இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் 21 மணி நேரத்துக்குப் பின் நேற்று முன்தினம்  மாலை விடுவித்தனர். பிறகு பறிமுதல் செய்யப்பட்ட 300 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றுடன் திருச்சிராப்பள்ளி தனிப்படைக் காவல்துறை வேனில் தமிழ்நாடு புறப்பட்டனர்.

இதற்கிடையே, ஜெய்ப்பூரிலிருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்ட ரத்தன், சங்கர் ஆகிய இருவரும் நேற்று முன்தினமே ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து திருச்சிராப்பள்ளி  காவல்துறை ஆணையர் எம்.சத்திய பிரியா 'செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘திருடர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் உறவினர்கள் திருச்சிராப்பள்ளி காவலர்களைச்  சிக்க வைப்பதற்காக, லஞ்சம் கேட்பதாக பொய் புகார் அளித்தனர். முதலில் அதை உண்மை என நம்பிய இராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையினர், பிறகு தரப்பட்ட விளக்கத்தை ஏற்று உண்மை நிலையை அறிந்து கொண்டு நேற்று அனைவரையும் விடுவித்தனர் எனத்  கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...