முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரின் ஒரே நாளில் 17 மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரின் ஒரே நாளில் 17 மசோதாக்களை திமுக அரசு நிறைவேற்றிவிட்டது பலருக்கும் அதிர்ச்சியானது 


தொழிலாளர்களின் 12 மணி நேர வேலைக்கான தொழிற்சாலை சட்டத் திருத்த மசோதவைப் போல மற்றொன்று மக்களைப் பாதிக்கும் மசோதா, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களான) சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்பது.

இச் சட்டம் இனி தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள் சுற்றுச் சூழலை அழிக்கக் கூடிய எந்தத் தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற முறையில் கொண்டு வரலாம் எனபதாக சகல உத்திரவாதத்தையும் அளிக்கும்.தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக  உயர்த்தப்பட்டிருப்பது தொழிலாளர்களை, குறிப்பாக பெண் தொழிலாளர்களை, கடுமையாகவே பாதிக்கும்.
 அவர்களின் உடல்நலம்,மனநலம் இரண்டும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகும். 

வீட்டுவேலை,குழந்தை வளர்ப்பு இவற்றுடன் 12 மணி நேர வேலை செய்வது எப்படிச் சரியாகும்?

மூன்று சிப்ட் முறை மாறி இரண்டு சிப்ட் என மாறும் போது 

உழைப்பு,ஓய்வு இரண்டும் முக்கியம்.  ஓய்வற்ற,உறக்கமற்ற உழைப்பை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துவது ஏற்புடையதா என்பதும் எழுவினா?.தொழில் வளர்ச்சி என்பது தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக ஒருபோதும் இருக்கவே முடியாது. இது உலக தொழிலார் சட்டங்களுக்கும் முரனாகும் தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை கைவிடவேண்டும் என்று திமுக சார்ந்த தொழிற்சங்கமே கேட்கும் சூழல் உள்ளதே!. ஜாதிகள் ஆவணங்களாக்கப்பட்டது ஆங்கிலேயர் காலத்தில்.

வாக்கரசியல் ஆட்சி அதிகாரம் 1918 காலகட்டங்களிலேயே இந்திய மக்களிடம் தான் இருந்தது.

1858 ஆம் ஆண்டு  முதல் 1918 ஆம் ஆண்டு வரை  பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி முதலாளிகளுக்கு மட்டுமே. உள்ளூர் அடியாட்ள்கள் இந்தியர்களே.

இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு உள்கட்டமைப்பு மொழிவாரி கலாச்சார நாடுகளையும், ஊர்களையும், பல இனங்களையும் கொண்டது. இதை செங்குத்தாக அல்லது தட்டையாக ஆராய்ச்சி செய்ய இயலாதென்பதே!பெரும் உழைப்பும் ஆழ்ந்த புத்தக படிப்பும் நம் மக்கள் மீது இதுவரையிலாக சுமத்தியுள்ள கறைகளைத் துடைக்க உதவும்.

உழைப்பவர்கள் அனைவருக்கும்  தற்போது தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மிக ஆபத்தான தொழிலாளர்களுக்கான  சட்டத் திருத்தங்களைச் சட்டசபையில் ஏப்ரல் மாதம்  12. ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு  நிறைவேற்றிவிட்டது!
சாதாரண பொது அறிவுள்ள எவராலும் உணரக் கூடிய ஆபத்தான ஷரத்துகள் இந்த 65 A சட்டத் திருத்ததில் உள்ளதில் முக்கியமான நான்கு அம்சங்களை மற்றும் சொல்லலாம்.

வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை அதிகரிப்பது,

வாழமுடியாத அளவுக்கு ஊதியங்களை குறைந்த. பட்சமாக நிர்ணயிப்பது,

தொழிலாளர்களுக்காக இருக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது,

நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது..

இவ்வளவு ஆபத்து இந்தச்  சட்ட திருத்தம் என்பதால் சட்டசபையில் விவாதத்திற்கு வைத்தால் கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்று எதிர்பாராவிதமாக சட்டென்று அமைச்சர் அறிவிக்க குரல் வாக்கெடுப்பு மூலம் 40 நொடிகளில் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, நூற்றாண்டாக தொழிலாளர்களின் வர்க்கம் போராடிப் பெற்ற அடிப்படை உலகளாவிய உரிமைகளை நாற்பது நொடிகளில் தமிழ்நாடு  சட்டமன்றம் நிராகரித்து விட்டது! இதை திமுக அரசா செய்தது என்பது  தான் அவர்களது கூட்டணிக் கட்சிகளுக்கே அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாகிறது.


வழக்கமாக இன்னின்ன விவகாரங்கள், மசோதக்கள் இன்று சட்ட சபையில் வைக்கப்பட உள்ளன என முன்கூட்டியே அனைத்து உறுப்பினர்களுக்கும் அஜண்டா தருவார்கள். அதிலும், இந்த நிகழ்ச்சி நிரல் இல்லை என்பதாகவே கூறப்படுகிறது.மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  அரசாங்கம் மூன்று வேளாண்மைச் சட்டங்களை விவாதமின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது தான் பலரது  நினைவுக்கும் வருகிறது! ஆனால், அதைவிட இலாவகமாக இதை அமல்படுத்திவிட்டது தற்போது மாநிலத்திலுள்ள திமுக அரசு என்பதேயாகும். இந்தச் செய்தியைக் கூட பல முக்கிய வெகுஜன ஊடகங்கள் வெளியிட்டுக் கவனப்படுத்தவில்லை என்பதும், நியாயமாக முதல் பக்கத்தில் எட்டுகாலத் தலைப்பு செய்தியாக வந்திருக்க வேண்டிய செய்தி தான் இது! தலையங்கத்தில் கண்டித்து எழுதப்பட வேண்டிய செயல்பாடிது! இன்றைய பத்திரிக்கை ஊடகங்களின் தர்மமா எனபதே மற்றோரு எழு வினா?
இது நாள் வரை பாரதிய ஜனதா கட்சியின்  பாதையில் திமுக பயணிக்கிறது என விடாது சொல்லிக் கொண்டிருந்த பலர் காங்கிரஸ் கம்யூணிஸ்ட் உள்ளிட்ட அரசியல் .கட்சிகள் இன்றைக்கு இடதுசாரி இயக்கங்களும், அதன் தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியு ஆகியவையும் இப்போது பகிரங்கமாகவே சொல்கின்றன. ‘இந்தச் சட்டத் திருத்த அமலாக்கத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் வழியில் அவரையும் முந்திச்  செல்கிறதே தமிழ்நாடு  அரசு என விவாதங்கள் தற்போது எழுகிறது 

இந்தியாவில் பாரதிய ஜணதா கட்சியல்லாத வேறெந்த மாநிலமும் அமல்படுத்தத் துணியாத  தொழிலாளர் சட்ட திருத்தம் 65 A–வை திமுக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதை அறிந்து திமுகவின் தொழிற்சங்க அமைப்பான எல்.பி.எப் தற்போது  விக்கித்து நிற்கிறது – என்ன சொல்வதென்று தெரியாமல்!வடசென்னையில் முன்பு அலுமினியத் தொழிற்சாலைகள் அதிகம். அலுமினியத்தைத் உருக்கித்தட்டி மோல்டிங்கில் வைத்து பாத்திரங்களும்  மற்றும் ரோலிங் மிஷினில் வைத்து தகடுங்களாகவும் வெளியே வரும்  அதில் நாலைந்து தெரு சார்ந்த  தினமும் நூறு குடும்பத்தின் பசியும்  அதனால் தீர்ந்தது.

ஆனாலும் அலுமினியத் தொழிற்சாலையில்  எரிக்கிறது தலைக்கு மேலுள்ள கூண்டுகள் வழியாக புகைபுகையாக வெளியில் வரும். நூறு குடும்பத்துக்கு சோறு போட்ட அதே கம்பேனி தான்  இப்படி புகையைக் கூண்டு வழியாக வெளியே விட்டதுல ஒரு குடும்பத்துக்கு ஒரு டாக்குடருன்னு மின்ட் எனும் தங்கசாலையிலிருந்து தேரடி வரைக்குமே நூறு டாக்டர்கள்  அப்போதே வந்து புதுசுபுதுசாக் கடை விரிசயசாங்க. வாரக்கூலியோ அப்போது பன்னென்டு ரூபாய் மட்டும் தான். டாக்டருக்கு பீஸ்  மூன்று ரூபாய். சீட்டில் எழுதும் மருந்துகள் குறைவு   மாத்திரைக்கும் அதே மூன்று ரூபாயாகும். அதுவே போகப்போக டாக்டர் பீஸ் அந்து ரூபாய் ஆனது. அதே சைஸில் மாத்திரையும். அந்த வாரக் கூலியில மிச்சம் இரண்டு ரூபாயாகவே இருக்கும். முழுமையாக அக் குடும்பம்  அரிசி வாங்கி பொங்கல் வைத்து வாரத்துக்கு வரும்  காசுபணம்  தாங்காது. வயிறும் பானை போல ஊதிவிடும்  உடைஞ்ச அரிசிகளை,அல்லது நெய் குருணை அல்லது  நொய்ன்னு விற்பாங்க. குஞ்சு குழுவான்களுடன் வாழும் அப்பகுதி மக்கள் அப்போது அக் குடும்பங்கள் அரிசி விலையில் கால்பங்கு தான். நாலைந்து மாசம் போக பலரும்  நெஞ்செரிச்சலும்  மார்பு எரிச்சல்ன்னு பாதிப்பேரும் நல்ல சோறு பாக்காமலேயே மீதிப்பேரும் செத்துப் போயி ஊரே வீணாய் போயிடுச்சு.  அன்று அவர்கள்  பாட்டன் முப்பாட்டன் வகையறா ஆடுமாடு நிலம் நீச்சு குளம்னு இருந்ததால சோத்துப் பஞ்சம் மூலம் சாகக்குடுக்கவில்லை. காற்று பொதுதானே? நெஞ்செரிச்சல் மார்பெரெரிச்சல் கூட டிபியும் போட்டுத் தாக்கி நிலங்களை விற்றுவிட்டு பொழச்சி இருந்திருக்காங்க. அப்போது தான்,

அலுமினியக் கம்பேனிங்களும் பீடிக் கம்பெனிகளும் ஊருக்கு வெளிய கொண்டு போய் புகையைவிட வைக்கணும்னு தோன்றியது ஆனால் தற்போது திங்கக்கிழையிலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் தான் அந்த ஆளுங்க வேலை பாப்பாங்க. காலையில் ஆறுமணிக்கு கூப்பிட்டா மதியம் இரண்டு மணிக்கு விட்டிருவோம். அதே மாதிரி காலை பத்துமணிக்கு கூப்பிட்டா மாகை ஆறுமணிக்கு விட்டுரவேணும்னு எட்டுமணிநேர வேலைக்கு ஊர் ஜனங்க எக்லாம் பேசி முடிச்சாங்க. அப்படி ஊர் ஜனங்க துணிச்சலா பேசறளவுக்கு பின்னால நின்னது  அலம் சென்ற நம்பிராஜன்பாலா போன்ற தாத்தாக்கள்  சின்னத்தம்பி, வரதன், ராகவன்னு ஏழெட்டு பெரிய நபர்பகளும். இவங்க மொத்த பேருக்கும்  மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியாரும் ராயபுரம் சக்கரைச் செட்டியாரும் பக்கபலமா வட சென்னையில்  இருந்திருக்காங்க. அதுக்குப் பின்னால, "எட்டுமணிநேரந்தான் உழைக்கணும் ஒரு மனுஷன், அதில் லீவு நாட்களும்  இத்தனைனு மேற்கண்ட சிங்கார வேலும், சக்கரையும் இன்னும் சிலரும் நிர்வாகத்தில் மல்லுக்கட்டி அதில் ஜெயிச்சும் காட்டியிருக்காங்க. லேபர் கிஸ்ஸான் கெஜட்டுங்ற செய்தி இதழ்  அதை அப்போதய காலத்தில் செய்தியாகவும் போட்டதை  பத்திரிகை முதலாளி சிங்காரவேலை தண்டிச்சதும் நடந்தது அரசாங்கம் அந்தப் பத்திரிகை தான் சவுத் இன்டியாவ்ல முதலில் வந்த ஆங்கில செய்தி இதழ் வருடம் சரியாக நினைவில்லை, 1922 ஆம் ஆண்டு எனத் தோண்றுகிறது, சவுத் இன்டியாவுல முதலில் மே தினம் கொண்டாடிய வகையிலும் இப்படி சிங்காரவேலு தலைமையில் நூறு பேருக்கு மேல கைதாகியிருக்காங்க.


இன்றிலிருந்து சரியா ஏழாம் நாள்

மேதினம் வருகிறது.இராயபுரம் மணிமண்டபத்லிருக்கும் சிங்காரவேலர் சிலைக்கும்

மெட்ராஸ் கலெக்டர் ஆபீஸ் உள்ளிருக்கும் சிங்காரவேலர் சிலைக்கும் கட்சி பாகுபாடு பாக்காமல் அத்தனை பேரும் மாலையோட போவார்கள் கம்யூனிஸ்ட் தோழர்களும் போவாங்க

என்னவோ நமக்கும் தோண்றியது எழுதினேன். அதாவது நாவிற்கு சுவையும்,

குடலுக்கு பதமும், இதமும், உடலுக்கு நலமும் வளமும் தருகின்ற பல் என்றாவது நற் சுவையை அறிந்திருக்குமா? தன் பசியைத் தான் ஆற்றி இருக்குமா? உழைத்து அரைத்து சொத்தையாகிவிடும்.

ஆனால் பல்லில் ஒரு வலி என்றால் மொத்த உடலும் படாதபாடு படும் . 

அது போலவே நமக்காக உழைக்கும் வர்க்கம் கைமாறு எதிர் நோக்கா நட்பின் பால் உறவின் பால் பேரன்பு காரணமாக இத் தகவல் 

நீர் நிலைகளான ஆறு, ஓடை, குளம், குட்டை, ஏரிகள். நீர் நிலைகள் இவை எல்லாவற்றையும் தொழில் வளர்ச்சிக்காக இழக்கலாமென்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மசோதா கொண்டு  வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டமானது  இதற்கு முன் இருந்த 

சுற்றுச் சூழலை பாதிகாக்கும் சட்டங்கள் எல்லாவற்றையும் செல்லாததாக்கி விடும் , உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரமும் இதில் பறிக்கப்பட வாய்ப்புள்ளது. இனி அணைத்துத் தடைகளையும் அகற்றி தொழிற்சாலை அமைக்கலாம். 

இச் சட்டமானது கடந்த மூன்றாண்டுகளாக மத்தியில் ஆளும்  பாரதிய ஜனதா கட்சியின் அரசால் பரிந்துரைக்கப்பட்டது என்பது தான் இப்போது கவனத்திற்குரியதாகும்.

இந்தச் சட்டம் அறிவிக்கப்பட்டதன் அடுத்த நகர்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய நிறுவன முதலீடுகளைப் பெறுவதற்காக அயல்நாடு செல்ல இருக்கும் பயணத் திட்டமும் தற்போது  அறிவிக்கப்பட்டு உள்ளது.

 எத்தனை தொழிற்சாலைகள் கொண்டு வந்தாலும் அதில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்பைப் பெறப்போவது  வட இந்திய வாழ் இளைஞர்கள் தான் என்பது நமது சமீபத்திய பல அனுபவங்களில் தெரியும் நிலையில்,  இது குறித்த எந்தத் தகவலும் இங்குள்ள அரசியல் சமூக சூழலியல் வாதிகள் அறிந்து  கொள்ள வில்லை என்பதே தற்போதுள்ள நிலை, 

இந்தியாவிலேயே மற்ற எந்த மாநிலத்தைவிடவும் கிராமப்புறங்களையும், ஊரகப் பகுதிகளையும் விழுங்கிய வண்ணம் புஞ்சைகள் அறவே ஒழிந்து நகரமயமாக்கல், தொழிற்மயமாக்கல் அசுரத்தனமாக நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு தற்போது  உள்ளது. இதில் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம் என்பதும்,

வெளிநாட்டிலுள்ள பெரு நிறுவனங்கள் வந்து இங்குள்ள இயற்கையை அழித்து, மக்கள் வாழ்வாதரங்களை சூறையாடிச் செல்வதற்கு தான் இந்திய சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி உயிர்தியாகம் செய்தனரா? என இது குறித்த மக்கள் நன்மை கருதும் பலர் தற்போது  பேசுவது நம் காதிலும் விழுகிறது. ஆனால் மக்கள் எதைப்பற்றிய எதிர்கால சந்ததிகள் பற்றிய கவலையின்றி ஆண்களில் பலர் சாராயம் பெண்களில் சிலர் தொலைக்காட்சித் தொடர் மாணவர்கள் வியாபார சூதாட்டமான கிரிக்கெட் என மாறி தமிழகத்தில் கடந்த பத்தாண்டில் மாறிப்போன உணவு உடை கலாச்சாரம் போல தற்போது சுற்றுச் சூழல் வாழ்வியலுக்கும் சங்கூதும் சட்டங்கள் வந்தது தான் மக்களின் எதிரகாலப் பிரச்சினையாகும். . அதோடு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்க தமிழ் நாடு அரசு முடிவு

மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாமென புதிய சட்டத் திருத்தம்.வெளிநாட்டு விருந்தினர் 

பங்கேற்கிற பன்னாட்டுக் கூட்டங்கள்,   மாநாடு, கொண்டாட்ட நிகழ்வுகள், கலந்துரையாடல்கள் போன்ற பொது இடங்களில்...

"மதுவகைகள் பரிமாற மாவட்ட ஆட்சியர்கள்

 அனுமதி பெற வேண்டும்" என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.

உள்ளூர் காதுகுத்து மற்றும்  கல்யாணவிருந்து பர்த்டே  ஃபேர்வெல் பார்ட்டிகளுக்கு அல்ல.

கட்டண விவரங்களோடு அரசிதழை வெளியிட்டு மாநில உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவிப்பு என்பது குறித்த சமூக ஆர்வலர்கள் கருத்து இதுதான் படிப்படயாகக் குறைப்பதா ?   என்ற வினா எழுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்