தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேரிடம் ரூபாய் .2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு:
பொதுமக்கள் தகவலளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள 'ஆருத்ரா' இயக்குநர்கள் 5 பேரை தேடப்படும் குற்றவாளியாக பொருளதாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளனர்
அவர்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க சம்மானம் வழங்கப்படும் என்றும். தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 'ஆருத்ரா' நிதி நிறுவனத்திற்கு திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், வேலூர், விருதுநகர், கடலூர் என மாநிலம் முழுவதும் 37 கிளைகள் நிறுவனம் துவங்கி சில ஆண்டுகளுக்கு முன், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்ததை நம்பி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் சுமார் ரூபாய்.2,438 கோடியை பண ஆசை காரணகாக முதலீடு செய்தனர். பணம் கட்டிய பொதுமக்களுக்கு முதல் 2 மாதங்கள் வட்டி கொடுத்தனர்.
ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு எந்த வித வட்டியும் கொடுக்கப்படவில்லை. அதனால் முதலீடு செய்த பொதுமக்கள் ஆருத்ரா நிதி நிறுவன அலுவலகங்களில் கட்டிய பணம் மற்றும் அதற்கான வட்டியை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் இந்த வழக்கு டிஜிபி உத்தரவுப்படி பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய போது, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக மோசடி செய்தது
உறுதியானதைத்தொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், ஏஜெண்டுகள் மீது மோசடி உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ட்ட பின்னர் மோசடி தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள், அதன் இயக்குநர்களின் வீடுகள், ஏஜெண்டுகளின் வீடுகள் என 57 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில், ரூபாய்.5.69 கோடி ரொக்கம், ரூபாய்.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களுடன் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள், ஏஜென்ட்களின் 120 க்கும் மேற்பட்ட வங்கி கணக்கிலிருந்த ரூபாய்.96 கோடி மட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் 97 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், இதுவரை நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த 16 நபர்களில், பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து குறறவாளி எனத் தெரிந்த பின் நீக்கப்பட்ட ஹரீஷ், பேச்சி முத்துராஜ்(எ)ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி உள்ளிட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 'ஆருத்ரா' நிதி நிறுவன உரிமையாளர் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர், கிழக்கு முப்பேர் பகுதியைச் சேர்ந்த உஷா, பூந்தமல்லி திருமால் நகரைச் சேர்ந்த தீபக் கோவிந்த் பிரசாத், சென்னை பூம்புகார் நகர், முதல் மெயின் ரோட்டைச் சேர்ந்த நாராயணி, செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபாளையம், ஸ்ரீ பாவானி நகரைச் சேர்ந்த ரூமேஷ்குமார் ஆகிய 5 பேர் இன்னும் காவல்துறையினரிடம் சிக்காமல் வெளிநாடுகளிலோ அல்லது வெளிமாநிலங்களிலோ தலைமறைவாக உள்ளனர்.
இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரீஷ் உள்ளிட்ட 11 பேரிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்த பணத்தில் பெரும்பாலான பணம் அரசியல் கட்சியின் பிரமுகர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. மேலும், பிரச்னைகளை வெளியே வராமல் தடுக்க கட்டப்பஞ்சாயத்து, தலைமறைவாக இருக்க அடைக்கலம் என பல கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஆருத்ரா உரிமையாளர் ராஜசேகர் தனது மனைவியுடன் துபாயில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அவரை சிபிஐ மூலம் இண்டர் போல் உதவியுடன் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வர பொருதாளதாரக் குற்றப்பிரிவு காவல்ருறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதேநேரம், தலைமறைவான மோசடி நிறுவன உரிமையாளர் ராஜசேகர், அதன் இயக்குநர்களான உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, ரூமேஷ்குமார் ஆகியோர் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறைக்கு உடனடியாகத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உறுதியான தகவல்களாக இருப்பின், 'தக்க சன்மானம்' வழங்கப்படும். 5 நபர்கள் குறித்து தகவல் கொடுப்பவரின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்கலாம். நேரில் தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள், காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம், காவலர் பயிற்சிக் கல்லூரி, அசோக் நகர் சென்னை என்ற முகவரியில் தெரிவிக்கலாம். தொலைபேசியில் தகவல் கொடுப்பவர்கள் 044-22504311 மற்றும் 044- 22504332 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படடுள்ளது,
கருத்துகள்