வாச்சாத்தி வரலாறு மறந்த ஜனங்களால் அந்த வரலாறு பேசும் கூத்தாடிகளுக்கு மரியாதை போலிகளை ஆதரிக்கும் மக்கள்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகிலுள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமைக் குக்கிராமமே வாச்சாத்தி.
1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படை வாச்சாத்தி கிராமத்திற்குள் புகுந்தது. சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் எனக் கூறி வீடு வீடாகப் புகுந்து சோதனை செய்த பின்னர் வீட்டிலிருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழாக நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்த பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட. 28 சிறார்கள் வாழ்வு பாதிக்கப்பட்டனர்.கிராம மக்கள் சார்பில் அப்போதய அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1992-ஆம் ஆண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்குப் பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு அப்போது உத்தரவிட்டதையடுத்து
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடியாக விசாரணை நடத்தியதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து வற்புறுத்தப்பட்டதையடுத்து 1996 ஆம் ஆண்டு இவ் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பின் கூட்டுக்குழுவைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று அங்கு அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது.
அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின் 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் வாதம் தொடங்கியது
2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வாச்சாத்தி பலாத்கார சம்பவத்தின் போது தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பைச் சேர்ந்த 7 பேர் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டது.
இந்த வன்கொடுமை தொடர்பாக 269 பேர் மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் காவல் துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளர்ரும் அடக்கம். வருவாய்த்துறையினர் 6 பேர். வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்களாவர் வாச்சாத்தி கிராமத்திற்குள். வழக்கு விசாரணையில் இருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் நடந்தது. இருதரப்பினரின் வாதமும் முடிவடைந்த நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 தேதி தீர்ப்பளிக்கப்பட்டதில், வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தமுள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனவும் இதில் பலாத்காரம் செய்ததாக 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. .வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் முழுவதும் வாச்சாத்தி என்ற பெயரில் திரைப்படமாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. ஆனால் வரலாறு மறந்த மக்கள் உண்மை இவ்வாறு இருக்க அதை கதையாக எழுதிய ஜெயமோகனையும் அதை ஆதாயமாக்கி திரைப்படம் எடுத்த வெற்றிமாறன் மற்றும் அதில் நடித்தால் புகழ் பணம் வரும் என அறிந்த கூத்தாடிக் கும்பல் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை என்பதே கொடுமை மக்கள் ஒன்றுக்கும் உதவாத திரைப் பிரபலங்களை கொண்டாடும் மனநிலை எந்தக் காலத்திலும் மாறாது போல இந்த மண்ணில் .
சமூகத்துக்கு ஆதரவாக ஒரு புல்லைக் கூட புடுங்கிப் போடாத திரையுலகத்திற்கு ஒற்றை புகைப்படத்தை வைத்து முற்போக்கு, பிற்போக்கு கொள்கைகளைத் தீர்மானிக்கும் நிலை மாற வேண்டும். இன்னும் எத்தனை விடுதலை வந்தாலும் அந்த வாச்சாத்தி பழங்குடி மக்களுக்கு விடுதலை இல்லை ,என்பதே உண்மை இதில் பொது நீதி போலிகளை கொண்டாடும் மக்கள் நிஜ கதாநாயகர்களை மறந்து போனதே
கருத்துகள்