மாநிலங்களவை தினத்தையொட்டி, அவைத் தலைவரின் உரை
மாண்புமிகு உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
1952-ம் ஆண்டு இதே நாளில் மாநிலங்களவை அமைக்கப்பட்டது. மாநிலங்களின் கவுன்சில் என்று நமது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்ட இது நமது அரசியலின் முக்கியப் பங்காற்றுகிறது.
நமது ஜனநாயகத்தின் கூட்டாட்சிக் கொள்கையை முக்கியமாகக் கொண்டு மாநிலங்களவை, மக்கள் நலனுக்காக குரல் எழுப்பி விவாதங்களை மேற்கொள்ளும் தலமாக விளங்கி முக்கியப் பங்காற்றி வருகிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே, "மேல் சபை" அல்லது "மூத்தோர் சபை" என்ற சொற்கள் அதிகாரப்பூர்வ சொற்களஞ்சியத்தின் பகுதியாக இல்லாவிட்டாலும், இந்த அவையின் தனித்துவமான, குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை போதுமான அளவில் பிரதிபலிக்கின்றன.
மற்றவர்கள் அனைவரும் பின்பற்றத் தகுந்த உன்னதமான நாடாளுமன்ற மரபுகளை அமைப்பதில் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நாடு நியாயமாக நம்மிடம் எதிர்பார்க்கிறது.
விவாதங்கள், பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கான தளமாக சபை இருக்க வேண்டுமே தவிர, இடையூறுகள் மற்றும் குந்தகம் ஏற்படுத்தும் அரங்காக மாறக்கூடாது.
இந்த முக்கியமான தருணத்தில் மேல்சபையின் உறுப்பினர்கள் , மாநிலங்களவையின் கண்ணியத்தைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொள்வதுடன், அர்த்தமுள்ள விவாதங்களை மேற்கொண்டு அமிர்த காலத்தில் நாட்டை பெரும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள்