சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு – எனப் பரவிய செய்தி
சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டதாகவும் . மொத்தமுள்ள 193 வாக்குகளில் 183 வாக்குகள் பெற்று பிரிட்டன் நீதிபதி கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை தோற்கடித்தார் எனவும்
பிரதமர் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் கடந்த 6 மாதங்களாக இதைச் சாதிக்க உழைத்த பிரதமர் நரேந்திர மோடியின் சாணக்கிய ராஜதந்திரம். என தகவல் வரவே இது குறித்த மதிப்பீடும் விளக்கமும் உண்மை நிலை என்ன ?
சர்வதேச நீதிமன்றமானது 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறுவப்பட்டது, 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செயல்படுகிறது. இது நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் ஓர் நீதிமன்றமாகும். மேலும், ஐ.நா சபை மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் இதனை அணுகும் போது சட்ட ஆலோசனையும் வழங்கும்.
இந்த நீதிமன்றத்தில் 15 நாட்டினை சார்ந்த நீதிபதிகள் உறுப்பினராக இருப்பார்கள். அவர்களின் பதவிக் காலம் 9 ஆண்டுகள். இந்த நீதிபதிகள் தங்களது சொந்த நாட்டின் பிரதிநிதியாகச் செயல்படமாட்டார்கள் என்பதும்.
சர்வதேச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எனும் பதவி இல்லை. அதில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளே உள்ளன.இதன்படி சர்வதேச நீதிமன்றத்தின் தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் இ.டோனோக் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் செயல்படுகிறார். அதே போல் ரஷ்யாவைச் சேர்ந்த கிரில் ஜிவோர்ஜியன் துணைத் தலைவராகவும் உள்ளார்.
அதில் 15 உறுப்பினர்களில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரியும் ஒருவர். அவர் முதன் முதலில் சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியாகும். அப்போது இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திலிருந்தது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதுவே இச் செய்தி குறித்த தகவல் உண்மை மேலும் கூடுதலாகப் பார்த்தால் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி 2012 ஆம் அண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்தின் திஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. இதில் நீதிபதியாக இருந்த ஜோர்டான் நாட்டின் அவ்ன் சவ்கத் அல் கசனே 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நீதிபதி பதவிக்கு காலியிடம் ஏற்பட்டதனால் அதற்கு இந்தியா சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தல்வீர் பண்டாரி பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதேபோல் பிலிப்பைன்ஸ் நாடும் புளோரின்டினோ பெலிசியானோவை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்ற நீதிபதிக்கான தேர்தல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மொத்தமுள்ள 197 வாக்குகளில் 122. தல்வீர் பண்டாரிக்குக் கிடைத்தது. இதேபோல் பாதுகாப்பு சபையில் மொத்தமுள்ள 15 வாக்குகளில் 13 தல்வீர் பண்டாரிக்குக் கிடைத்ததையடுத்து அவர் நீதிபதியாகத் தேர்வானார் இதற்கு முன் கடந்த 1988 முதல் 1990 வரை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அதற்கு முன் 1950 ஆம் ஆண்டில் சர் பெனகல் ராவ் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
கருத்துகள்