விமான நிலையம் தொடர்புடைய தமது அண்மை நிகழ்ச்சிகளின் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
விமான நிலையம் தொடர்புடைய தமது அண்மை நிகழ்ச்சிகளின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 2023 ஆம் நிதியாண்டில் அதிகளவு மூலதனச் செலவு செய்தது குறித்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியாவின் ட்விட்டர் பதிவிற்கு அவர் பதிலளித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
”உயர்தர உட்கட்டமைப்புக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தின் பல்வேறு செயல்பாடுகளில் இதுவும் ஒன்று. கடந்த சில மாதங்களில் கோவா, பெங்களூரு, சென்னை, இட்டா நகர், ஷிவமோகா ஆகிய இடங்களில் நடைபெற்ற விமான நிலையம் தொடர்பான நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன். இதில் சில நிகழ்ச்சிகளின் காட்சிகள்”.





கருத்துகள்