முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை வளையத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்

ரூபாய்.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் சம்பந்தப்பட்டுள்ளார் அதனால் வெளிநாடு தப்பியோட்டம்




அவரை விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை  திட்டம்

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை நிறுவனம் திருப்பித்தரவில்லை.





அதனால்  பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூபாய் .2,438 கோடி மோசடி செய்ததாகக் கொடுக்கப்பட்ட புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக், ஐஜி ஆசியம்மாள், கண்காணிப்பாளர் மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து  வருகின்றனர். வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது அதன் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவான நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


மேலும் இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், நடிகரும் பாரதிய ஜனதா கட்சியில்  கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரமுக்களஞ்சியம் என்பவரின் மகன்களில் ஒருவரான ஆர்.கே.சுரேஷ் என்பவரிடம் வழக்கை மத்திய அரசின் மூலம் ஒன்றுமில்லாமல் செய்வதாகக் கூறி  ரூபாய். 12 கோடியை அந்தக் குற்றவாளிகள்  கொடுத்துள்ளனராம் . அந்தப் பணத்தைக் கொண்டு உயர் அதிகாரிகளை வளைக்கத் திட்டமிட்டிருந்தார். இதற்காக சில இடைத்தரகர்களையும் அணுகியுள்ளார்.

ஆனால் பொருளாதாரக் குற்றப்பிரிவில் சில நேர்மையான அதிகாரிகளும் பணியாற்றுவதால், இவரால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ், அதோடு ஏமாற்றி விட்டதாகவும்  கூறப்படுகிறது. இதை தனது வாக்குமூலத்தில் ரூசோ கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், மோசடிப் பணமான ரூ. 12 கோடியை வாங்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ் என்பவரை  விசாரிக்க காவல்துறையினர் தேடினர். ரூசோ கைதான தகவல் வெளியானதும், நடிகர் ஆர்.கே.சுரேஷ், துபாயுக்கு விமானம் தப்பி ஓடி விட்டார். இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டால் மேலும் அதில் சம்பந்தப்பட்ட பல பாஜக நிர்வாகிகள் சிக்கலாம் என்றும் பேசப்படுகிறது. மேலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய பாஜக நிர்வாகிகள் வேறு யாரிடமாவது பணத்தைக் கொடுத்துள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர்  விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதனால் நடிகர் ஆர்.கே.சுரேஷை தமிழ் நாட்டிற்கு அழைத்து வர பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மா்ச் மாயம்  28 ஆம் தேதி ஆருத்ரா கோல்டு நிதிநிறுவன முறைகேடு வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஹரீஸ், மாலா ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்து, இந்த வழக்கில் ஹரீஷை 4 நாட்கள் காவல்துறை காவலில் விசாரிக்கவும் மற்றொரு இயக்குனர் மாலதியை ஒரு நாள் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார். ஹரீஷிடம் 4 நாட்கள் காவல்துறை விசாரணை முடிவடைந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் மீன்டும் ஆஜர்படுத்தினர். அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. பல தகவல்கள் பெறப்படவுள்ளன. விசாரணையில்தான் அனைத்தும் தெரியவரும் என்றார். அதையடுத்து, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷை ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதிவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று முதல் ஹரீசிடம் காவல்துறையினர்   தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனரை சென்னை விமான நிலையத்தில்  கால் வைத்ததும் கைது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பண மோசடி விவகாரம், இப்போது மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறது. முறைகேடு தொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் விளையாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தவருமான ஹரீஷ் என்பவரைக் கைது செய்திருக்கிறது பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறை

வழக்கமான நிதி நிறுவன மோசடி வழக்கில் அரங்கேறும் கைதைப்போல இதைக் கடந்துபோய்விட முடியாது. காவல்துறை  திவீரமாகத் தேடியபோதே, பிரதமரை வரவேற்ற பா.ஜ.க குழுவில் இடம்பிடித்தவர் தான் ஹரீஷ்.

புதுச்சேரி, மும்பை, டெல்லி என இடங்களை அடுத்தடுத்து மாற்றி, கைதிலிருந்து தொடர்ச்சியாகத் தப்பித்து வந்தவரை ஒருவழியாகச் சுற்றி வளைத்து விட்டது காவல்துறை. அவரின் கைது விவகாரம், பா.ஜ.க மாநில விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி முதல் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரை விசாரணைக்கு  வந்து வெளிச்சம் போட்டுக் காட்டிருக்கிறது. 

தமிழ்நாடு பா.ஜ.க-வுக்குள் ஹரீஷின் கைது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது... அண்ணாமலை, அமர் இருவருக்கும் இதனால் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்ன..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...