நுகர்வோர் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட பொருட்கள் மீது பிஐஎஸ் சான்றிதழ் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும்: நுகர்வோர் நலத்துறை செயலாளர்
நுகர்வோர் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட பொருட்கள் மீது பிஐஎஸ் சான்றிதழ் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்று நுகர்வோர் நலத்துறை செயலாளர் திரு ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் இன்று (10.04.2023) நடைபெற்ற பயிலரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர், என்சிஹெச் 1915-ஐ பயன்படுத்துமாறு வலியுறுத்தினார். நிலுவை வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மனை வணிகம் தொடர்புடையவையாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். தவறான விளம்பரங்கள் இடம்பெறுதல், பொருட்களின் நம்பகத்தன்மை முறையான குறைதீர்ப்புக்கு நுகர்வோர் ஆணையங்களின் பங்களிப்பு போன்ற, சந்தையில் நுகர்வோர்களால் எதிர்கொள்ளப்படும் முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இந்தப் பயிலரங்கின் நோக்கமாகும்.
இந்தப் பயிலரங்கில் தொடக்கவுரையாற்றிய திரு ரோஹித் குமார் சிங், நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பது நுகர்வோர் நலத்துறை. தேசிய ஆணையம், மாநில ஆணையங்கள், மாவட்ட ஆணையங்கள், இந்திய தர நிர்ணய அமைவனம், என்டிஎச், சட்டரீதியான அளவையியல், தேசிய நுகர்வோர் உதவி எண் போன்ற பிற அமைப்புகளின் கூட்டான முயற்சிகளை எடுத்துரைத்தார். நுகர்வோர் நலத்துறையின் நிதி ஆதரவுடன் 2024 மார்ச் 31 வாக்கில் 750 விலைப்பட்டியல் சேகரிப்பு மையங்கள் என்ற இலக்கை அடைவது விருப்பமாகும் என்றார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விலைப்பட்டியல் சேகரிப்பு மையங்களை அமைக்க அனைத்து மாநிலங்களையும் திரு சிங் வலியுறுத்தினார்.
தங்களின் எல்லை வரம்புக்குட்பட்ட பகுதிகளில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற உறுதிபாட்டுடனும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை தீவிரமாக அமல்படுத்த மாநிலங்கள் மற்றும் இதர பங்குதாரர்களுடன் நுகர்வோர் நலத்துறை ஒத்துழைப்பைத் தொடரும் என்ற உறுதியுடனும் இந்தப் பயிலரங்கு நிறைவடைந்தது.
கருத்துகள்