ரூ. 3 .37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 25.05.2023 அன்று சிங்கப்பூர் செல்லவிருந்த ஆண் பயணி ஒருவரை இடைமறித்து விசாரித்தபோது அவர் ஆடைகளுக்குள் ஒவ்வொன்றும் 100 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 52 நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவரது பகளை சோதித்தபோது ஒவ்வொன்றும் 100 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 2783 பணநோட்டுகளும், ஒவ்வொன்றும் 500 சவுதி அரேபியன் ரியால் மதிப்புள்ள 1000 பணநோட்டுகளும் 19 சிறுசிறு பைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் அந்நியச்செலாவணி மதிப்பு ரூ. 3.37 கோடியாகும் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள்