முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தினருடனான சந்திப்பின் போது துணை குடியரசுத்தலைவரின் உரை

இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தினருடனான சந்திப்பின் போது துணை குடியரசுத்தலைவரின் உரை (பகுதிகள்)


நண்பர்களே, இந்த வருகை எனக்கு என்றும் மறக்க முடியாததாக இருக்கும்.  இது நான் நீண்ட உரையை நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பம் அல்ல ஆனால் நான் ஒன்றை உறுதியாகச் சொல்வேன்- இந்தியா தனது புலம்பெயர்ந்தோரைப் பற்றி பெருமை கொள்கிறது. அவர்கள் பாரதத்தின் 24 x 7 தூதர்கள் ஆவர். இங்கு 1.7 மில்லியன் மற்றும் உலகம் முழுவதும் 32 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

இந்த நேரத்தில் இந்தியா அனைத்து உலகளாவிய நிலைகளிலும் மிகுந்த செயல்பாடு கொண்ட ஒரு சனநாயக நாடு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிர்வாகமானது மனிதகுலத்தின் 1/6 பங்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றியமைத்திருப்பதைக் காணலாம்.

மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கும், சாமானியர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முன்பு கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது இன்றைக்கு அடிப்படை உண்மையாக இருக்கிறது.

இந்தியாவில் 700 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர். இதனால் வெளிப்படைத்தன்மையுடன் பணப் பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. இதுவரை 110 மில்லியன் விவசாயிகள் வருடத்திற்கு மூன்று முறை பெற்ற ஊக்கத் தொகை ரூ. 2.2 லட்சம் கோடியை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு இளைஞரும் தனது ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிதிக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. முத்ரா கடனுதவித் திட்டம் வேலை கொடுக்கும் இளைஞர்களை உருவாகியுள்ளது.

34 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது.

கிராம அளவில், நகராட்சி மட்டத்தில், மாநில அளவில், மத்திய அளவில், கூட்டுறவு மட்டத்தில் அரசியலமைப்பு பொறிமுறைகளை அரசியலமைப்பு வழங்குகிறது. பாரதத்தில் இவை அனைத்தும் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் இத்தகைய ஜனநாயகத்தை நீங்கள் காண முடியுமா?

இந்தியர்களாக நாம் பெருமைப்பட வேண்டும். நமது வரலாற்று சாதனைகளில் பெருமிதம் கொள்ள வேண்டும். உலகில் எந்த நாடு கோவிட் தொற்றுநோயை இவ்வளவு வெற்றிகரமாகச் சமாளித்ததாகக் கூற முடியும்? தடுப்பூசி டோஸ் ஒவ்வொரு இந்தியருக்கும்  இலவசமாக, சரியான நேரத்தில், அளவீடு செய்யப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. அதன் சான்றிதழானது ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையான உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பாருங்கள். உலகத் தரம் வாய்ந்த விரைவுப் பாதைகள், மோட்டார் பாதைகள், விமானப் பரப்பு மற்றும் கிராம மட்டம் வரை நிச்சயமாக தொழில்நுட்பம் விரிவாக உள்ளது. ரயில் மார்க்கத்தைப் பொறுத்தவரை, முன்பு ராஜதானிகள் மற்றும் பிற ரயில்கள் இருந்தன, ஆனால் இப்போது வந்தே பாரத் உள்ளது.

இந்தியாவில் இப்போது எந்த கிராமத்திற்குச் சென்றாலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காணலாம். பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். அவர்களின் கிராமத்திலேயே யாராவது அவர்களுக்காக அதைச் செய்வார்கள்.

பாரதம் சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டான “அமிர்த காலம்” முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் மாவீரர்களும், அறியப்படாத மாவீரர்களும் அடையாளம் காணப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டை கொண்டாடும் போது இந்தியா எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கு உறுதியான அடித்தளம் போடப்பட்டுள்ளது.

தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவதாக இருப்போம். இந்த சாதனை சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கனவுகளுக்கு அப்பாற்பட்டது. கடுமையாக உழைக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும், தொழிலாளிக்கும், விவசாயிக்கும், திறமையான அரசாங்கக் கொள்கைகளுக்கும், கொள்கைகளை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நேர்மையாகச் செயல்படுத்தியவர்களுக்கும் இந்தப் பெருமை உரியதாகும்.

நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் ஏனெனில் இது இந்தியப் பிரதமரிடமிருந்து நான் கற்றுக்கொண்டப் பழக்கம். அவர் வாக்குறுதிகளை மிக வேகமாக நிறைவேற்றுவார். தேவைப்படும் வீடுகளுக்கு 170 மில்லியன் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்குவதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான வீடுகள் ஏழைகளுக்குக் கிடைத்து வருகின்றன, இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பொதுத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...