முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொன்மையான கலாச்சாரங்களில் உச்சநீதிமண்றம் தலையிடாதென ஜல்லிக்கட்டில் தீர்ப்பு

தொன்மையான கலாச்சாரங்களில் நாங்கள் தலையிட முடியாதென 


உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்தது,            தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மாநில அரசு  கலாச்சாரமென சட்டமியற்றியுள்ளது.

நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். அதை மாற்ற விரும்பவில்லை. அதனால் ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லையென உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியது.

மாநில சட்டமன்றத்தின் முடிவை, அதன் பார்வையை நாங்கள் எதிர்க்க மாட்டோம், மேலும் இது மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். தொன்மையான ஒரு கலாச்சாரம் இது என சட்டமன்றம் அவசரச் சட்டத்தில் முடிவு செய்துள்ளது.  தமிழ்நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிகட்டு போட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரம் என மாநில அரசு கருதினால் அதில் நீதிமன்றத்துக்கு மாற்றுக் கருத்திருக்க முடியாது.


அப்படித் தலையிடுவதாக இருந்தாலும் அதில் மாநில சட்டசபை முடிவு எடுத்த நிலையில் அதில் உச்சநீதிமன்றம்  தலையிட முடியாது, என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்திய உச்ச நீதிமன்றம்

18 ஆம் தேதி மே மாதம் , 2023 அன்று இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும்  யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வ ஆதரவாக

அமர்வு நீதிபதிகள்  கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சிடி ரவிக்குமார் ஆகியோர் வழங்கிய தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சார வீர விளையாட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்புரை                                                     அறிக்கையிடத்தக்கதாக வெளிவந்தது அது அணைவராலும் பாராட்டைப் பெறுகிறது           


      இந்திய உச்ச நீதிமன்றத்தில்

                                 சிவில் அசல் அதிகார வரம்பு

    ரிட் மனு (சிவில்) எண். 2016 / 2023

          விலங்குகள் நல வாரியம்

          இந்தியா & பலர் . ..மனுதாரர்கள் 

                                           எதிராக

          யூனியன் ஆஃப் இந்தியா & ஏஎன்ஆர். ..எதிர்மனுதாரர்கள்

                                            உடன்          அசல் மனு (சிவில்) எண்.6/ 2018

                             அசல்  மனு (சிவில்) எண்.10 /2018

                                 சிவில் மேல்முறையீடு எண்..... 2023

                      (சிறப்பு விடுப்பு மனு (சிவில்) எண்  3528/ 2018)

         ரிட் மனு (சிவில்) எண். 1193 /2017

                            ரிட் மனு (சிவில்) எண். 1152/2018      ரிட் மனு (சிவில்) எண். 24 /2016

                             ரிட் மனு (சிவில்) எண். 25 / 2016

                             ரிட் மனு (சிவில்) எண். 26 / 2016

                             ரிட் மனு (சிவில்) எண். 27 / 2016

                             ரிட் மனு (சிவில்) எண்.  88/2016

                            ரிட் மனு (சிவில்) எண். 1011/2017

நிதி அஹுஜா

                            ரிட் மனு (சிவில்) எண். 1059/2017

நாள்: 18. 05. 2023.

     ரிட் மனு (சிவில்) எண். 1188/2017

                                 60 / 2021 வழக்கு மாற்றப்பட்டது

                                                                                               தீர்ப்பு

அனிருத்தா போஸ், ஜே.

2018 இன் படி சிறப்பு விடுப்பு மனு (சி) எண்.3528 இல் வழங்கப்பட்ட தீர்ப்பு.

ஜல்லிகட்டு நடத்துவதத்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், காளைகளுக்கு வலி, வேதனை இல்லை. இருக்கிறது என்றே வைத்துக்கொள்ளுவோம். மற்ற விலங்குகளை வைத்து போட்டிகள் நடப்பது இல்லையா?  பல விலங்குகளை வைத்து வேலைகளைச் செய்கிறார்களே? அது தவறு இல்லையா?ஜல்லிக்கட்டு என்பது கேளிக்கை கிடையாது.  இதில் காளைகளின் வீரத்தைக் காட்டுகிறார்கள். காளைகள் ஏன் முக்கியம் என்பதை காட்டுகிறது. குதிரைகளை மட்டும் போட்டிகளில் பயன்படுத்துகிறார்களே? அதில் என்ன தவறு இருக்கிறது. குதிரைகளை பயன்படுத்துவதை இவர்கள் ஏன் எதிர்ப்பதில்லை? காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது கண்களில் மிளகாய் பொடி தூவுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். காளைகள் இவர்களின் குடும்பத்தில் பிள்ளைகள் போல. பெற்ற பிள்ளைகளை யாரவது இப்படி நடத்துவார்களா?

இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டுக் காளைகள் உயிர் வாழ்கின்றன. அந்தக் காளைகளுக்கு நோய்கள் வரலாம். ஆனால் ஜல்லிக்கட்டு காரணமாக காளைகளை இவர்கள் சிறப்பாக பாதுகாக்கிறார்கள். இல்லை யென்றால் வெளிநாட்டுக் காளைகள் அந்த இடத்தைப் பிடித்துவிடும். ஜல்லிக்கட்டு தான் நாட்டுக் காளைகளைப் பாதுகாக்கிறது. சர்க்கஸ் போல ஜல்லிக்கட்டு ஒன்றும் கேளிக்கை கிடையாதென்பது  குறிப்பிடத்தக்கது.ஜல்லிக்கட்டு சட்ட திருத்தத்தை இயற்றியது சீனிவாசன் ரத்தினசாமி ! 

இன்று அது உச்ச்நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...