முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிரிக்கெட் விளையாட்டு கடிவாளம் இல்லாத குதிரை

இந்தியாவில் மக்களை அதிகம் பாதிக்கும்   ஐ.பி.எல். தற்போது அதற்கு  பாரதிய ஜனதா கட்சியின் அரசு கடிவாளம் போடாவிட்டால்  இந்தச் சூதாட்டத்தால் நாடு மேலும் கலாச்சாரப் பாரம்பரியக் கேடாக  மாறும். 


இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.பி.எல். இரண்டையும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிரபார்ப்பாகும்

ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது வாயிலாகக் கிடைக்கும் டெலி காஸ்ட் ரைட்ஸ் உட்பட அனைத்து வித வருமானத்துக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு வேண்டும். 






அதில் நடக்கும் பகல் கொள்ளையை ஊக்குவிக்கிறதென்ற கவலை எதிரகாலத் தலைமுறை மீது ஆர்வம் கொண்டவர்களின் கவலை அதுவே ஒரு பகுதி மக்களுக்கு சாரயத்தால் பாதிப்பு மறுபகுதி மக்கள் தொலைக்காட்சித் தொடருக்கு அடிமை, இப்போது இளைஞர்கள் தரப்பில் இந்த ஐபிஎல் தற்போது ஆட்டிப் படைக்கிறது        இந்தக் கூத்தையெல்லாம் என்னவென்று சொல்வது? என்பது அப்பாவி மக்களின் கவலை.


ஐபிஎல் அணி என்பது என்பது ஒரு தனியார் கிரிக்கெட் நிறுவனம் அல்லது கிளப்.

அந்தக் கிளப்பின் சட்டையை அணிந்து கொண்டு தான்  விளையாட்டுத் துறை அமைச்சர் இருக்க அப்போது இளைஞர்கள் நிலை 

அந்தச் சட்டையில் S N J 10,000 என்ற விளம்பரம் வேறு. அது என்ன சர்பத் விற்கும் கம்பெனியா? 

இல்லை தானே!

அரசியல்வாதி வேறு, அரசியல் சாசன சட்ட கடமையை நிறைவேற்றும் ஆட்சியாளர் என்பது வேறு. ஆட்சியாளர் அனைவருக்கும் பொதுவானவர்.












உதாரணத்திற்கு இரு மாநிலங்களுக்கு இடையே அரசின் அதிகாரபூர்வ விளையாட்டு அணிகள் மோதுகிறதென்று அதனை ஒரு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் எடுத்துக் கொள்வோம்

இரு அணி வீரர்களையும் சமமாக மதித்து திறமையாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவாரே தவிர ஒரு சார்பு நிலை எடுத்து தனது மாநில அணி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தவே மாட்டார்.

எந்த அணி வெற்றி பெற்றாலும் பொதுவெளியில் வாழ்த்துவார் பாராட்டுவார். தோல்வியுற்ற அணி மனம் நோகும் படி ஒரு வார்த்தை கூட பிரயோகிக்க மாட்டார்..

ஆனால் இங்கு இப்போது 






சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மே மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே மாதம் 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய நிலை  ஆனால் டிக்கெட்டுகள் வாங்கி பலர் பிளாக்கில் விற்பது ஜோரஸக நடந்தது ஆம் அதுவும் ஒரு சூதாட்டம் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.

இந்தியாவின் தேசிய வியாதி ஐ.பி.எல். தற்போது அதற்கு பாஜக அரசு கடிவாளம் போடவில்லை என்றால் இந்த சூதாட்டத்தால் நாட்டில் தீமையாக மாறும். 

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.பி.எல். இரண்டையும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். 


ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது வாயிலாக கிடைக்கும் டெலிகாஸ்ட் ரைட்ஸ் உள்ளிட்ட அனைத்து வித வருமானத்துக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும். 

இதை  அரசு செய்யவில்லை என்றால் நடக்கும் பகல் கொள்ளையை  ஆட்சி ஊக்குவிக்கிறது என்றே அர்த்தம்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அங்கிருந்த ஒருவரைப் பார்த்துச் செய்த  அருவருப்பான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐபிஎல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்பட்டம்வென்றது. இறுதியில் 6 பந்துக்கு 13 ரன்கள் தேவை எனும் சூழ்நிலையில் மோஹித் சர்மா முதல் 4 பந்தை யார்க்கராக வீச அதில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை எனும் நிலை ஏற்பட்டது. மொஹித் சர்மா வீசிய 5 வது பந்தை ஜடேஜா சிக்சரை நோக்கிப் பறக்கவிட்டார். தொடர்ந்து கடைசிபந்துக்கு 4 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்தப் பந்தை ஜடேஜா 4 ரன்கள் விளாச 5 வது முறையாக சென்னை ஜாம்பியன் கோப்பையைத் தட்டிச்சென்றது.

இதனிடையே இறுதி ஓவரின் முதல் 4 பந்தை மோஹித் சர்மா சிறப்பாக வீசிய நிலையில், அணியில் வெற்றிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டதனால் குஜராத் அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ-யின் செயலாளருமானஜெய்ஷா அங்கிருந்த ஒருவரைபார்த்துஅருவருப்பானசெய்கைசெய்ததுபெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்,                          நாட்டில் பலருக்கும் திண்பதுக்குச் சோறிருக்காது,

குடிப்பதற்க்குக் கூட நல்ல தண்ணீர் இருக்காது 

சுவாசிக்கவும்  சுத்தமான காற்றிருக்காது 

நாம் பத்தாண்டுக்கு முன் பாத்து ரசித்த மலை இருக்காது,

துள்ளிக் குதித்த ஆற்றில் மண் இருக்காது 

நாம் ஓடி விளையாடிய நிலமிருக்காது 

இருந்தும் கேட்பான் கிரிக்கெட் ஸ்கோர் எவ்வளவு ? அவன் யார்? இந்த சூதாட்ட்தால் ஆர்வம் தூண்டப்பட்ட இளைஞன்  நம் கலாச்சாரம் பன்பாடு மறந்த கிரிக்கெட் சூதாட்ட ரசிகன் ...கிரிக்கெட்டில் யார் வெற்றி பெற வேண்டும், யார் தோல்வியடைய வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்த சூதாட்டத்தின் மையப்புள்ளிதான் . மேலும் பல்லாயிரம் கோடி சூதில் வரும் வருவாய் அவர்களை மகிழ்விக்க சில நூறு கோடிகள்  மட்டுமே ஜெயிக்கும் தோற்கும் இங்கு வெல்வதும் தோற்பதும் வீரர்கள் அல்ல வீரர்களாக பார்க்கப்படும் வியாபாரக் குதிரைகள் அவர்கள் வருவாய் கௌரவம் அல்ல..கிரிக்கெட் சாமானியன் பொழுது போக்கு வர்த்தகர்கள் நடத்தும் வியாபாரம். லகான் அவர்கள் கையில் தான் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...