சாலைத் திட்டங்களின் நிலை தேசிய நெடுஞ்சாலைகளின் (என்.எச்) மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
முதன்மையாக பொறுப்பாகும். ரூ.79,789 கோடி மதிப்பீட்டில் 6270 கி.மீ நீளமுள்ள 202 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயலாக்க நிலையில் உள்ளன. ரூ.10,992 கோடி மதிப்பிலான 474 கி.மீ நீளமுள்ள 42 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஏல நிலையிலும், ரூ.3,816 கோடி மதிப்பிலான 245 கி.மீ நீளமுள்ள 11 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தேதி அறிவிக்கும் நிலையிலும் உள்ளன. இந்த திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து 18-30 மாதங்கள் வரையிலான கட்டுமான காலத்தைக் கொண்டுள்ளன.
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்