முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊட்டி மலை ரயில் புதிய வடிவில் இயக்கம்

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து


கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.


இதனையடுத்து, இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற உதகை மலை ரயில் வண்டியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்தப் புதிய ரயில்வண்டியின் பெட்டிகள் அழகியலோடு  சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டிருக்கும்.  புதிய வடிவமைப்பிலான  பெட்டிகளில் அகலமான கதவுகள் மற்றும் பெரிய ஜன்னல்கள் மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதி ஆகியவை பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும்.. பெட்டிகளில் 110வோல்ட்  எல்இடி  விளக்கு மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுகள் உள்ளன.


அதோடு ரயில் நிலையத்தின் நடைமேம்பாலம் அருகே ரூ. 1.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முன்பதிவு அலுவலகத்தையும் வாகனங்கள் நிறுத்துமிடத்தையும்  அமைச்சர் திறந்து வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு கவுன்டர் உட்பட 3 கவுன்டர்கள் இதில் உள்ளன. 2 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களும் உள்ளன. இவற்றின் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளைப் பயணிகள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு, குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் இந்த மலை ரயில் வண்டியை இந்திய ரயில்வே துறையினர் புதிய வடிவில் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். புதிய வடிவில் உருவாக்கப்பட்டு இன்று துவங்கப்பட்ட ஊட்டி மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ்ந்தனர்

இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பி.கே.சின்கா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய முன்பதிவு அலுவலகத்தை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் நாளை திறந்துவைத்தார்




மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் சிறப்பு ரயில் போக்குவரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் அருகே புதிய முன்பதிவு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1.24 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த முன்பதிவு அலுவலகம், பரந்த சுற்றுப் பகுதியையும்  வாகனங்கள் நிறுத்துமிடத்தையும் கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு கவுன்டர் உட்பட 3 கவுன்டர்கள் இதில் உள்ளன. மேலும், 2 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களும் (ஏடிவிஎம்)  உள்ளன. இவற்றின் மூலம், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளைப் பயணிகள் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம்.


இந்தப் புதிய முன்பதிவு அலுவலகத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் நாளை (15.07.2023) காலை 08.45 மணிக்குத்  திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து காலை 09.10 மணிக்கு நீலகிரி மலைப்பாதை சேவைகளுக்கான  மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் சிறப்பு ரயில் போக்குவரத்தை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து மத்திய இணை அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இந்தப் புதிய ரயில் வண்டியின் பெட்டிகள் அழகியலோடு  சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டிருக்கும்.  புதிய வடிவமைப்பிலான  பெட்டிகளில் அகலமான கதவுகள் மற்றும் பெரிய ஜன்னல்கள் மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதி ஆகியவை பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும். பெட்டிகளில் 110வோல்ட்  எல்இடி  விளக்கு மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுகள் உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...